தமிழ் சினிமாவில் சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுப்பதில் வல்லவர் சமுத்திரகனி. இவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் இருக்கும். இவர் புகழ் பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தரன் இடம் துணை இயக்குனராக பணி புரிந்தவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருகிறார் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையில் இருக்கும். இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா என கிட்டத்தட்ட 10 படங்களை இயக்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் சமுத்திரக்கனி மீம்ஸ்கள் தான் உள்ளது.
இதையும் பாருங்க : 144 தடை போட்டாலும் உங்க கிளாமர் கடை திறந்து தான் இருக்கு – யாஷிகா புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்டை பாருங்க.
என்னடா இது சமுத்திரகனிக்கு வந்த சோதனை என்று சொல்லுமளவிற்கு மீம்ஸ் மூலம் வச்சு செய்கிறார்கள் நெட்டிசன்கள். எதுக்கு சமுத்திரக்கனியை கலாய்க்கிறார்கள் என்றே சில பேருக்கு தெரியாத அளவிற்கு சமுத்திரகனியின் புகைப்படத்தை வைத்து செய்கிறார்கள். பொதுவாகவே சமுத்திரக்கனி படங்களில் கருத்துக்கள் நிறைந்திருக்கும்.
ஆரம்ப காலத்தில் இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், சமீபகாலமாக இவர் படத்தில் தனிப்பட்ட கருத்து, தனிப்பட்ட அரசியல் விருப்பங்களை திணிப்பதாக ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார்கள். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு நாடோடிகள் 2 திரைப்படம் என்று சொல்லலாம். இப்படி கருத்து கந்தசாமியாக வலம் வரும் சமுத்திரகனியின் சில வசனங்களை வைத்து சிலர் கடுமையான விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள்.
இதையும் பாருங்க : மீண்டும் லொள்ளு சபாவை ஒளிபரப்புங்க. கோரிக்கை வைத்த இந்திய கிரிக்கெட் வீரர்.
அதிலும் சிலர் சமுத்திரகனி,சமுத்திர காய், சமுத்திர பூ, சமுத்திர கொட்டை, சமுத்திர வேர் என்று பல்வேறு வகையில் விமர்சித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் தாண்டியும் இன்னும் சமூக வலைத்தளங்களில் சமுத்திரக்கனியை வைத்து செய்வது முடியவில்லை. சமுத்திரகனி முகத்தை மட்டும் எடுத்து பல்வேறு விதமாக கிண்டல் கேலியும் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அலா வைகுண்டபுரம் லோ என்ற மாற்று மொழி படத்தில் சமுத்திரக்கனி ஜாதிப் பெயர் வைத்து நடித்து இருக்கிறார்.
மாற்று மொழி படத்தில் ஜாதி பெயருடன்(அப்பளநாயுடு) சமுத்திரகணி நடித்ததற்காக இந்த புரட்சி எல்லாம் நடக்கிறதா? என்று தெரிந்து பலர், தெரியாமல் பலர் என சமுத்திரகனியை சமூகவலைத்தளங்களில் வைத்து செய்கிறார்கள். சமீபத்தில் சசிகுமார்— சமுத்திரகனி கூட்டணியில் நாடோடிகள் 2 படம் வெளிவந்தது. இந்த படத்தில் பரணி, அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.