ஆகஸ்ட் 11 ஆம் தேதி அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் லால் சிங் சாத்தா இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகிய ஒரு திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது 1994 இல் பாரஸ்ட் கம்ப். இந்த படம் அமெரிக்க சரித்திரத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கி சற்று கற்பனையும் கலந்து உருவான படம் இந்த படம் ரிலீஸ் செய்தபோது ஹாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது இப்படம். அதுமட்டுமில்லாமல் அகடமி ஆப்த அவார்ட் லீடிங் ரோல், அகாடமி ஆப்த அவார்ட் பெஸ்ட் பிக்சர், அகடமி ஆப்த அவார்ட் பெஸ்ட் ரைட்டர் போன்ற பிரிவுகளில் அவார்டுகளை தட்டிச் சென்றது இந்த படம்.

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்குகில் உதயநிதி ஸ்டாலின், அமீர்கான், நாக சைதன்யா, பார்த்திபன் மற்றும் லால் சிங் சாத்தா படத்தின் இயக்குனர் அத்வைத் சந்தன் போன்றவர்கள் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்தி மற்றும் தமிழில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் வயோகாம் 18 ஸ்டுடியோவும் இணைந்து வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமீர்கான், படத்தின் இயக்குனர், உதயநிதி ஸ்டாலின் பேசினார்கள்.

Advertisement

இதையும் பாருங்க : விஜய்யை தாக்கிப் பேசினாரா தனுஷ் – வீடியோவை பகிர்ந்து கேலி செய்யும் விஜய் Haters

இந்தி படமா வேன்டாம் என்ற உதயநிதி :-

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் பேசியது என்னவென்றால் அமீர்கானின் லால் சிங் சாத்தா படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. தமிழ்நாட்டில் இந்து திணிப்பிற்கு எதிராக சூழல் நிலவி வரும் நேரத்தில் ஐயோ இந்தி படமா வேண்டாம் என்றேன். உடனே அமீர்கான் என்னை தொடர்பு கொண்டு அதுவும் வீடியோ காலிலேயே என்னை தொடர்பு கொண்டு இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என என்னிடம் கேட்டார் நானும் யோசிக்காமல் சரி ஓகே என்று சொல்லி விட்டேன்.

Advertisement

இந்தியை எதிர்க்கவில்லை இந்தி தினிப்பதை தான் எதிர்க்கிறோம் :-

தொடர்ந்து பேசிய அமீர்கான் என்னிடம் இந்திய எதிர்பவர்கள் ஹிந்தி படங்களை பார்ப்பார்களா எனிடம் கேள்வி எழுப்பினார் அதற்கு உதயநிதி ஸ்டாலின் நாங்கள் இந்தியை பொழுதும் எதிர்க்கவில்லை ஹிந்தியை திணிப்பதை மட்டும் தான் எதிர்க்கிறோம் இந்தியை கற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை அது எங்களுக்கு தேவை என்றால் நிச்சயமாக கற்றுக் கொள்வோம். நானும் உங்கள் ரசிகன் தான் ஒரு ரசிகனாக இந்த படத்தை வெளீயிடுகிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். படம் நன்றாக உள்ளது கண்டிப்பாக மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார்.

Advertisement

பார்திபனின் குழப்பமான பதிவு :-

சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த பதிவுகள் இப்பொழுது வைரல் ஆகி உள்ளது. பார்த்திபன் அந்த பதிவில் லால் சிங் சத்தா பார்த்து கண் கலங்க அமீர்கானிடம் சொன்னேன், அன்பை,அர்ப்பணிப்பை, காதலை,கடமையை கண்ணியத்தை இதை விட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம்.

தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப…. தேசிய விருதுக்கா? என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், “மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது” என பார்திபன் டூவீட்டர் பதிவு அனைவரையும் குழப்பதில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement