விஜய்யை தாக்கிப் பேசினாரா தனுஷ் – வீடியோவை பகிர்ந்து கேலி செய்யும் விஜய் Haters

0
457
vijay
- Advertisement -

தற்போது தனுஷின் 44வது படமான ‘திருச்சிற்றம்பலம்’ இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். அதோடு இந்த பாடல் வெளியாகி 11 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. மேகம் கருக்குதே பாடலும் 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சென்றது.

-விளம்பரம்-

கடந்த மாதம் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது என்னவென்றால் “நாம் குழந்தையாக இருக்கிறப்ப வளர்க்கும் அப்பா அம்மா அவர்களுக்கு வயதாகியுடன் குழந்தையாக மாறிவிடுகின்றனர் ” அப்பொழுது அவர்களை நம் குழந்தையாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் மாஸ் என்று அவர் கூறினார். நடிகர் தனுஷ் இவ்வாறு கூறியதை இணைவாசிகள் சிலர் இவர் மறைமுகமாக நடிகர் விஜய் தான் கூறுகிறார் என அடித்து கூறுகின்றனர். ஆகையால் மறுபடியும் தனுஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அதில் இருந்து தப்பிக்கத்தான் கவர்னரை சந்தித்தாரா ரஜினி – ப்ளூ சட்டை முதல் நெட்டிசன் வரை கேலி செய்யப்படும் ரஜினி.

தந்தையின் பிறந்தநாள் விழாவில் விஜய் இல்லை :-

நடிகர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இருவரும் இப்பொழுது சரியாக பேசிக் கொள்வதில்லை. இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் என இனையத்தில் சில செய்திகள் வந்தவண்ணமே இருந்தது. இதை உண்மையாக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திர சேகர் அவருடைய என்பதாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்களை எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்களில் சந்திரசேகரும் அவரது மனைவி மட்டுமே இருக்கிறார்கள். இதனால் எஸ்.ஏ.சி க்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் பேசிக் கொள்வதில்லை என்ற கூற்று உண்மை என சிலர் சொல்லத் தொடங்கினார்கள்.

-விளம்பரம்-

எளிமையாக நடைபெற்ற சாதாபிஷேகம் விழா :-

இவர்களுக்கிடையில் இருக்கும் உறவு முட்டிக்கொண்டு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில். இதற்கு அடுத்தாற் போல் ஒரு சம்பவம் நடந்தது எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவியும் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று சாதாபிஷேகம் விழா செய்தனர். சாதாபிஷேகம் விழாவில் பெற்ற பிள்ளைகள் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. நடிகர் விஜய் இருந்து நடத்தி வைக்க வேண்டிய சதாபிஷேகம் விழா எளிமையான முறையில் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவரது மனைவியை மட்டுமே பூஜையை நடத்தினார். இந்த சம்பவமும் தந்தை மகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த விளக்கம் :-

இந்த நிகழ்வுல்லாம் வைத்து நடிகர் விஜய்யின் ஹெட்டர்ஸ் மற்றும் அவரை பிடிக்காத சில பேரும் விஜய் மீது குற்றம் சாட்ட தொடங்கிவிட்டனர். பெற்ற தகப்பன் தாயே விஜய் அவர்கள் மதிக்கவில்லை, சரியாக பார்த்து கொள்ளவில்லை என்றும் பெரியவர்களே மதிப்பது என்ற விஷயம் திரையில் நடிப்பதோடு சரி என்று இணையத்தின் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை எடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் தான் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எங்களுக்குள் வேறு எந்த பிரச்சினைகளும் இல்லை என தெரிவித்தார். இதையெல்லாம் பார்க்கும் போது நடிகர் தனுஷ் விஜய்யே தான் மறைமுகமாக தாக்கியுள்ளார் என்ன சர்ச்சைக்கு உள்ளானார் தனுஷ்.

Advertisement