‘கதையே வேண்டாம் தமன்னா டான்சாலே படம் ஹிட்’ சர்ச்சை கருத்துக்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த விளக்கம்

0
544
- Advertisement -

தமன்னாவை குறித்து சொன்ன சர்ச்சை கருத்துக்கு பார்த்திபன் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர்.
அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கி நடித்து இருக்கும் படம் ‘டீன்ஸ்’. டி. இமான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

டீன்ஸ் படம்:

இந்த படத்தில் யோகி பாபு, ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், ரஞ்சித் தண்டபாணி, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் டீன்ஸ் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தான் கமலஹாசனின் ‘இந்தியன் 2’ படம் வெளியானது. ஆனால், இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் டீன்ஸ் படம் நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. 6 நாட்களிலேயே இந்த படம் உலக அளவில் 90 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பார்த்திபன் பேட்டி:

இந்நிலையில் டீன்ஸ் படம் தொடர்பாக இயக்குனர் பார்த்திபன் பேட்டி கொடுத்து இருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், இப்போதெல்லாம் படத்திற்கு கதை இருக்கா என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. படத்தில் தமன்னாவின் டான்ஸ் இருக்கா என்று தான் பார்க்கிறார்கள். அவருடைய டான்ஸ் இருந்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என்றெல்லாம் பேசியிருந்தார். இப்படி அவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது.

பார்த்திபன் விளக்கம்:

இதற்கு நெட்டிசன்கள், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் காவலா பாடல், ‘அரண்மனை 4’ படத்தில் அச்சச்சோ போன்ற பாடலை குறிப்பிட்டு தான் பார்த்திபன் சொல்கிறார், இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில், ” நண்பர்களே! ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Advertisement