விஜய் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக நடிகர் பார்த்திபன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.

அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த படம் ‘டீன்ஸ்’. டி. இமான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர்.
பார்த்திபன் குறித்த தகவல்:
இந்த படத்தில் யோகி பாபு, ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பார்த்திபன் பதிவு:
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் பார்த்திபன் அவர்கள் எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருப்பார். இவர் தன் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான தருணங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு திரைப்படத்தின் பூஜை அன்று 10 ஜோடிகளுக்கு தன்னுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைத்தது தொடர்பாக பார்த்திபன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்யாணசுந்தரம்’
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 20, 2025
போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம்.
ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன்.அதுவே பின் தொடரப்பட்டது பலரால். பின்னெரு… pic.twitter.com/ub6IxkpxzJ
விஜய் பற்றி சொன்னது:
அந்த பதிவில் அவர், 'கல்யாணசுந்தரம்’ போட்டோ செஷனோடு முடிந்து(கை)விட்டப் படம். ஆனால் பூஜையன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்தச் செலவில் தாலி முதல் மெட்டி வரை, தட்டுமுட்டு சாமான் பெட்டி படுக்கை என சீர் செய்து சினிமா பூஜைகளை பிரயோஜனமாகவும் செய்யலாம் என தொடங்கி ஙைத்தேன். அதுவே பலரால் பின் தொடரப்பட்டது பலரால் பின்னெரு காலத்தில் தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்து தான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது. யாரோ ஒருவர் இந்த போட்டோவை அனுப்பி என பழைய நினைவை கீறியதால் என்று கூறி இருக்கிறார்.

விஜய் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தற்போது இவர் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தான் இவருடைய கடைசி படம். இதை அடுத்து இவர் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். கடந்த ஆண்டு தான் இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சிக்கு பெயர் வைத்து இருக்கிறார். தற்போது கட்சி பணிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் விஜய் கூறி இருக்கிறார்.






