தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை நேற்று வெளியிட்டு இருந்தார். அதில் ‘படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு முன்பு மேக்கிங் வீடியோ என்று அரை மணிநேரம் காண்பித்திருக்கிறார்கள்.

அதில் பார்த்திபன் மற்றும் கலைஞர்கள் பட்ட கஷ்டம் தெரிகிறது. ஆனால், படத்தை எடுக்க இவ்வளவு மெனக்கெட்டவர்கள் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். நம்ம ரசிகர்களுக்கு பொருத்தவரை கதை எப்படி இருப்பது என்று தான் பார்ப்பார்கள். படம் முதல் ஷாட்டா? நான்லீனியரா? ஒன்னும் பார்க்க மாட்டார்கள். ஒரு இயக்குனருக்கு தேவையானதும் கதை தான்.அதுமட்டுமில்லாமல் இது முதல் ஒரே ஷார்ட் பிலிம் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதே போல் நிறைய மொழிகளில் எடுத்து இருக்கிறார்கள்.

Advertisement

இதையும் பாருங்க : படத்தில் வந்த கழுதைக்கு இத்தனை லட்சம் சம்பளம், டச்சப் பாயை நடிக்க வைத்த பார்த்திபன் – ஒரு சுவாரசிய தவல்கள்.

இரவின் நிழல் படம் குறித்து சொன்னது:

அதோடு பார்த்திபன் இதை உலகிலேயே நான்லீனியர் படம் என்று சொன்னார். ஆனால், ஏற்கனவே 2013 இல் ஈரானில் fish & cat என்ற படம் வந்து விட்டது. அதனால் இதை உலகிலேயே, தமிழகத்திலேயே, சினிமாவிலேயே என்று சொல்வதெல்லாம் தேவையில்லாத ஒன்று. ஒரு இயக்குனர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால் போதும். அதற்கு இந்த மாதிரி எல்லாம் சொல்வது அர்த்தமற்ற ஒன்று என்று படம் குறித்தும் பார்த்திபன் குறித்தும் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

பார்த்திபன் பதிலடி :

இப்படி ஒரு நிலையில் ப்ளூ சட்டையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் ‘விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுசரி! எதுசரி என விளங்க.

Advertisement

ப்ளூ சட்டை மாறன் சொன்ன அந்த படம் :

சார் don’t feel உங்க திறமையும் கடின உழைப்பும் எடுத்துக் கொண்ட முயற்சியும் வெற்றியை தர போகிறது தருகிறது சுலபமாக வெறும் விமர்சனம் மட்டும் அவர்களால் முடிந்தது போகட்டும் திருஷ்டி அவ்வளவே மனதை சமநிலைக்கு கொண்டு ஒரு புண் (நகை) that’s பார்த்திபன் style. Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை. Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன்.

அவர் மீது இன்றும் மரியாதயே :

குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்திமக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே

Advertisement