சூர்யா, கார்த்தி இணைந்து பாடிய பார்ட்டி படத்தின் வீடியோ சாங் ..! வீடியோ இதோ

0
893
Party

இயக்குனர் செங்கட் பிரபு இயகத்தில் நடிகர் கார்த்திக் ‘பார்ட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான ‘பிரியாணி ‘ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அம்மா கிரேஷன்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ள இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ் , ஜெய்ராம், ஷாம், சிவா, நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைதுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘சா சா சாரி’ என்ற பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை இந்த படத்தின் காதனாயகனான நடிகர் கார்த்திக்கும், அவரது சகோதரர் நடிகர் சூர்யாவும் இணைந்து பாடியுள்ளனர். இருவரும் முதல் முறையாக இணைந்து பாடியுள்ள இந்த பாடல் இரு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா ஏற்கனவே ‘அஞ்சான்’ படத்தில் ‘எக் தோ தீன் ‘ என்ற பாடலை பாடி இருந்தார். அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட் ஆனது. அதே போல இந்த பாடலும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும், நடிகர் கார்த்திக் பாடிய முதல் பாடல் இதுவே என்பது குறிப்புடத்தக்கது.