சூப்பர் ஸ்டார் பட்டத்த போட்டுக்கறது – சூப்பர் ஸ்டார் பட்டத்தை வெளுத்து வாங்கிய தனுஷ் பட நடிகை

0
329
- Advertisement -

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருந்தது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பின் விழாவில் ரஜினி காக்கா-கழுகு கதையை கூறி இருந்தார். விஜயை விமர்சித்து தான் ரஜினி கூறி இருந்தார் என்று புது சர்ச்சை கிளப்பி இருந்தார்கள்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் சர்ச்சை:

இதனால் சோசியல் மீடியாவில் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பனிப்போரே நடந்தது. இதனை அடுத்து பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை கூறி வந்தார்கள். அந்த வகையில் கலாநிதி மாறன், 72 வயதில் ரஜினி மாதிரி நடித்தால் நீங்களும் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகலாம் என்று சவால் விடும் வகையில் பேசி இருந்தார். இதை அடுத்து விஜய் அவர்கள் லியோ படத்தின் வெற்றி விழாவில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருத்தர் தான். ரஜினிகாந்த் தான்.

விஜய் சொன்னது:

நான் மக்களுக்கான தளபதியாகவே இருக்க விரும்புகிறேன் என்று பேசி பஞ்சாயத்துக்கு ஒரு வழியாக முடிவு கொண்டு வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். காரணம், நிறைய பேர் திட்டுகிறார்கள்,கிண்டல் செய்கிறார்கள் என்று கூறி இருந்தார். இப்படி இந்த ஆண்டு முழுவதுமே இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் தான் பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பார்வதி மேனன் வீடியோ:

இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி அவர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விமர்சித்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக்கறதுனால என்ன பெருமை இருக்கு. என்னை பொருத்தவரை அது வேஸ்ட் ஆப் டைம். சூப்பர் ஆக்டர் பட்டம் கிடைத்தால் பெருமையாக ஏற்றுக் கொள்ளலாம். சிலர் ஏன் தன்னை சூப்பர் ஸ்டார் என்று பெருமையாக சொல்லிக்கிறாங்க என்று புரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

பார்வதி மேனன் குறித்த தகவல்:

பின் மலையாளத்தில் சூப்பர் ஆக்டர் யார் என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு பார்வதி, பகத் பாஸில், ரீமா ஆகியோருடைய பெயரை பார்வதி கூறியிருந்தார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி மேனன். தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பூ’ படத்தில் கதாநாயகி யாக நடித்து அறிமுகமானவர் பார்வதி மேனன். அதற்கு பின் இவர் சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார்.

Advertisement