ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.அதிலும் கடந்த சில நாட்களாக ‘வாத்தியார்’ மீம்ஸ் படு வைரலானது. வாத்தியாரே ஏன் நடந்து போரிங்க வாங்க சைக்கிள்ல போலாம்… எனும் வரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் பல விதமான மீம்களை போட்டு கலாய்த்து வந்தனர்.

இதையும் பாருங்க : இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது, இப்படிக்கு – Psனில் தன் ரோலை உறுதி செய்த கார்த்தி.

Advertisement

அதே போல இந்த படத்தில் நடித்த பலரும் தங்கள் பங்கிற்கு வாத்தியார் மீம்ஸ் போட்டு காலாய்த்தனர்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பசுபதியை வரவேற்கும் விதமாக வாத்தியார் மீம்ஸ் போட்டு வரவேற்றுள்ள ஆர்யா, வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே பாக்சிங் விட ரத்த பூமி உன்னோட பெயரில் இங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான் தாண்டானு நீ உள்ள வந்த பாத்தியா.

உன் மனசு மனசு தான் வா வாத்தியாரே இந்த வேர்ல்ட் உள்ள போலாம்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் ஆர்யாவின் இந்த டீவீட்டுக்கு பதில் அளித்த பசுபதி, ஆமா, கபிலா, பாக்சிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி ஒக்காந்துகிறேன், என்ன எல்லா இடத்துக்கும் கூட்டினு போ’ என்று ரங்கன் வாத்தியார் ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement