இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது, இப்படிக்கு – Psனில் தன் ரோலை உறுதி செய்த கார்த்தி.

0
2234
ponniyin
- Advertisement -

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, பிரபு, ரஹ்மான், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம்.மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது.

இதையும் பாருங்க : ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல ஆர்யாவின் தங்கையாக நடித்த நடிகையா இது. இப்போ என்ன செய்றார் தெரியுமா ?

- Advertisement -

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஜெயம் ரவி மற்றும் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் தன்னுடைய போர்ஷனை முடித்த ஜெயம் ரவி, “பொன்னியின்செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன். மணி சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

ஜெயம் ரவியின் இந்த டீவீட்டிற்கு கமன்ட் செய்து கார்த்தி, இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது 😁. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.- வந்தியத்தேவன் என்று பதிவிட்டு செல்வன் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement