பார்த்திபனின் அழகான மூத்த மகள் திருமணம்.! மாப்பிளை இந்த பிரபல நடிகரின் பேரனாம்.!

0
15824
Parthiban-abinaya
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது பயணத்தை துவங்கி தற்போது ஒரு முக்கிய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் பார்த்திபன். நடிகர் பார்த்திபன் பிரபல நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்று இரண்டு மகள்களும் உள்ளனர்.

-விளம்பரம்-

இதில் இளைய மகள் கீர்த்தனா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், பின்னர் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இயக்குநர் மணிரத்னம் மற்றும் தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், தற்போது பார்த்திபன் இயக்கிவரும் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இளைய மகளுக்கு கீர்த்தினாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் மூத்த மகளுக்கு நிட்சதர்த்தம் நடிப்பெற்றுள்ளது. தனது மகளின் நிச்சயதார்தம் குறித்து பேசிய நடிகை சீதா, கடந்த ஆண்டு என் இரண்டாவது பொண்ணு கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு, என் மூத்த பொண்ணு அபிநயாவுக்கு தீவிரமா வரம் தேடிட்டு இருந்தோம்.

மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், சென்னையில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். அவர், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன்). மாப்பிள்ளை வீட்டார், எங்களுக்குத் தூரத்து சொந்தம்தான். ஜாதகம் உட்பட எல்லா வகையிலயும் இரு குடும்பத்தினருக்கும் பிடிச்சுப்போக திருமணத்துக்கு முடிவு பண்ணினோம். கடந்த ஜனவரி மாதம் சோழா ஹோட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்துச்சு. அதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைச்சிருந்தோம்.

-விளம்பரம்-
Advertisement