அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொதுச் சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பத்மஸ்ரீ விருதுகள் :
1. குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா
2. மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை
3. இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
4. நடிகர் பிரபு தேவா
5. டாக்டர் ஆர்.பி. ரமணி
6. டிரம்ஸ் சிவமணி
7. நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டிய கலைஞர்)
8. பங்காரு அடிகளார்
9. கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
10. மறைந்த நடிகர் காதர் கான்
11. முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்
12. பாட்மின்டன் வீரர் சரத் கமல்
13. கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
14. நடிகர் மனோஜ் பாஜ்பாய்
15. டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
16. மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா
17. ஷாதப் முகம்மது
18. கபடி வீர் அஜய் தாக்கூர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷன் விருதுகள் :
1. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்
2. மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்
4. முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு
5. முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர் கரிய முண்டா.
6. அகாலிதளம் தலைவர் தீந்ஷா.
7. மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.
8. லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்
9. நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது