இன்னும் நீங்க நயன்தாராவ விடலயா 10 தல Audio Launchல் சிம்பு செய்த செயலால் கலாய்கும் ரசிகர்கள்

0
841
- Advertisement -

பத்து தல இசைவெளியீட்டு விழாவில் சிம்பு பாடி நடனமாடிய பாடல் தற்போது ட்ரோல்களுக்கு உள்ளகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். அதன் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு சமீப காலமாகவே சிம்பு அவர்கள் தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படமும் “வெந்து தணிந்தது காடு” படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

- Advertisement -

பத்து தல :

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது நடித்துள்ள படம் “பத்து தல” இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை இயக்குனர் நார்தன் மற்றும் இயக்குனர் கிருஷ்ணன் இயக்குகிறார்கள். இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஞானவேல் ராஜா தன்னுடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு நவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

பத்து தல இசை வெளியீட்டு விழா :

பத்து தல படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நேரு அரங்கில் பிரம்மாண்டமாக “பத்து தல” படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்தது. அதோடு டிரைலரும் வெளியானது. இந்த விழாவில் “பத்து தல” படத்தின் படக்குழுவினர், சிம்புவின் அப்பா டி.ஆர், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கவுதம் கார்த்திக் என பல கலந்து கொண்டனர். மேலும் பல ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டு “பத்து தல” படத்திற்க்கு ஆதரவு கொடுத்தனர். மேலும் இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

லூசு பெண்ணே பாடல் :

இப்படியொரு நிலையில் பொதுவாக சிம்பு எது பேசினாலும் அதி சமீப காலமாகவே சர்ச்சையாக வந்து விடுறது. அப்படித்தான் தற்போதும் நடந்துள்ளது. அதாவது சிம்பு நேற்று நடந்த “பத்து தல” இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சப்பிறைஸ் கொடுக்கிறேன் என்று சொல்லி “வல்லவன்” படத்தில் வந்த “லூசு பெண்ணே” பாடலை பாடியிருந்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்க மறு புறம் இது யாரை நினைத்து பாடினார் சிம்பு என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

பழைய காதலை மறக்க வில்லையா சிம்பு :

ஏனென்றால் “வல்லவன்” படம் வெளியான போதுதான் நயன்தாரா மற்றும் சிம்பு காதலிக்கின்றனர் என்றும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பல கிசுகிசு எழுந்தது. வேலும் வல்லவன் படத்தில் நயன்தாரா தான் கதாநாயகியாக இருந்தார். ஆனால் இவர்களது காதல் விரைவில் முற்று பெற்று சிம்பு ஹன்ஷிகாவை காதலித்தார் ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சிம்பு காதலித்த ஹன்ஷிகா மற்றும் நயன்தாரா என இருவருக்குமே தற்போது திருமணம் ஆனா நிலையில் “லூசு பெண்ணே” பாடலை சிம்பு மேடையில் பாடியிருப்பது தற்போது ட்ரோல்களுக்கு உள்ளகி வருகிறது.

Advertisement