எப்படி இருக்கிறது யோகி பாபுவின் ‘பேய் மாமா’ – முழு விமர்சனம் இதோ.

0
4291
pei
- Advertisement -

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் பேய்மாமா. இந்த படத்தில் யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், துரை, கோவை சரளா, மாளவிகா மேனன், ரேகா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த பேய்மாமா படம் பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு திரையரங்கிற்கு வெளிவந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்பதை வாங்க போய் பார்க்கலாம்.

-விளம்பரம்-
Yogi Babu's Pei Mama Poster Triggers Twitter By Photoshopping Vicky  Kaushal's Bhoot: Part One

கதைக்களம்:

- Advertisement -

பங்களாவில் பேய்கள் இருப்பதால் அந்த பங்களாவை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். பின் அந்த பங்களாவில் இருக்கும் பேய்களை விரட்ட முயலும் வில்லன் குழுவிற்கும் யோகி பாபு குழுவுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் கதை தான் பேய்மாமா. வழக்கமான பேய் கான்செப்ட்டை தான் இந்த பேய்மாமா கதையும் கொண்டிருக்கிறது. அந்த காலத்திலிருந்து இப்போது வரும் பேய் படங்களில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சின்ன சின்ன விஷயங்களை தான் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் பல நகைச்சுவை நடிகர்களை வைத்து எடுத்து இருந்தாலும் படத்தில் சொல்லும்படியான காமெடி காட்சிகள் ஒன்றும் வரவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் ஸ்பூஃப் ஃபார்முலாவை தான் சக்தி சிதம்பரம் இந்த படத்தில் கையாண்டிருக்கிறார். நித்யானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூப் சேனலை கலாய்ப்பது என்று அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Image

பழைய பிரியாணியை சூடு பண்ணி சாப்பிட்ட மாதிரி தான் பேய் மாமா கதையும் உள்ளது. யோகி பாபு தன்னுடைய வழக்கமான நடிப்பையே இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார். இனிமேலாவது யோகி கவனாக படங்களை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். மேலும், இந்த படத்தில் நிறைய நடிகர்களை இயக்குனர் பயன்படுத்தி இருப்பதால் எதற்கு ஏன் என்று பல கேள்விகளை முன் வைக்கிறது. சிரிப்பு எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவிற்கு படத்தில் நகைச்சுவை இருந்தது.

பிளஸ்:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

Pei Mama Movie Stills | Chennaionline

மைனஸ்:

வழக்கமான அரைத்த மாவையே பேய்மாமா படத்தில் அரைத்து இருக்கிறார் இயக்குனர்.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு திகிலும் இல்லை, நகைச்சுவையும் இல்லை.

லாக் டவுனுக்கு பிறகு திரையரங்கில் வெளிவந்த போய் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பேய்மாமா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

Pei Mama Movie Download In Isaimini, Kuttymovies, Moviesda, Tamilrockers,  Tamilyogi Trending on Google - SV Entertainment

மொத்தத்தில் பேய்மாமா– ரொம்ப போங்கு மாமா

பூட் படத்தின் இந்தி போஸ்டரை காப்பி அடித்து பேய்மாமா போஸ்டர் என வந்தபோதே ரசிகர்கள் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்.

Advertisement