தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவந்தாலும், மலையாளக் கரையோரத்திலிருந்து அழைப்பு வந்தால், உடனே யெஸ் சொல்கிறார் நயன்தாரா. அறிமுக இயக்குநர் தயான் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில், நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

இந்தப் படத்துக்கு ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ எனப் பெயரிட்டுள்ளனர். முதன்முறையாக நயன்தாராவும் நிவின்பாலியும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தில், திணேஷன் என்கிற ரோலில் நிவினும், ஷோபனா என்கிற ரோலில் நயனும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க காதலும் காதல் நிமித்தமுமாகக் கதை நகர்கிறது.

Advertisement

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படபிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் நிவின் பாளி, நயன்தாரா மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்காக மூன்று கேரவன்கள் வாடகைக்கு வரவழைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், கேரவேனில் இருந்த நடிகை நயன்தாராவை கீழே இறங்க செய்தனர் அதிகாரிகள். இதனால் பல மணி நேரம் நயன்தாரா வெளியில் நின்றுகொண்டிருந்தார். இந்த சோதனையின் போது அந்த மூன்று சொகுசு கேரவனுக்கு வரி செலுத்தப்படவில்லை என்று கூறி அந்த மூன்று கேரவன்களையும் சீஸ் செய்தனர்.

Advertisement

அதன் பின்னர் 2 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தி அந்த மூன்று வேன்களும் மீட்கப்பட்டது. படப்பிடிப்பின் போது இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் நயன் மிகவும் அப்சட்டில் இருக்கிறாராம். இதனால் எவ்வளவு விரைவாக முடியுமா தமது போர்சனை முடிக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டுள்ளாராம் நயன்தாரா.

Advertisement
Advertisement