சமீபத்தில் வெளியான ஒரு படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பார்த்த பலரும் அந்த படத்தின் இயக்குனருக்கு பணத்தை அனுப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீனா மணிமேகலை இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான மாடத்தி திரைப்படம் பெருமாலினோர் தவறவிட்ட ஒரு தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும். நீஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாடத்தி விமர்சகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. 

திருநெல்வேலியைச் சுற்றி இருக்கும் 30 கிராமங்களில் வாழும் புதிரை வண்ணார் மக்களைச் சந்தித்து, உரையாடி படத்துக்கான கருவை அந்த மக்களிடமே பெற்று இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை பெற்றிருக்கிறார். சுயாதீன திரைப்பட இயக்குநரான இவர் கிரவுட் ஃப்ண்டிங் மூலம் குறைந்த தொகையை ஈட்டி சொந்த தயாரிப்பில் படத்தை உருவக்கி இருந்தார். 

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இயக்கிய லீனா, PiratedCopy பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. @neestream தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும் என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

நடிகை லீனாவின் பதிவை கண்ட பலர் அவரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு இருந்தனர். மேலும், திருட்டுத்தனமாக இணையத்தில் இந்த படத்தை பார்த்த பலரும் லீனாவிற்கு டிக்கெட்டுக்கான பணத்தை அளிப்பதாக கூறி இருந்தனர். இதனால் தனது வங்கி விவரங்களையும் அனுப்பி வைத்தார் லீனா. மேலும், டிக்கெட்டுக்கான பணத்தை மட்டும் அனுப்புங்கள், கூடுதலாக பணம் அனுப்பி தன்னை கண்டனாலி ஆக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

Advertisement

லீனா, வங்கி விவரங்களை பகிர்ந்தும் பலரும் அவருக்கு பணத்தை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், நிறைய பேர் pirated copy படம் பார்த்ததால குற்றஉணர்வா இருக்கு,acct info தாங்கன்னு கேட்டுட்டிருந்தாங்க. பொறுமையா OTT-ல டிக்கெட் வாங்கிப் பாருங்கன்னு சொல்லிட்டே இருந்தேன். ரொம்ப கேக்கறாங்கன்னு 2 பேருக்கு details தந்தேன்.அடுத்த படத்துக்கும் வச்சுக்கோங்கன்னு 500ரு போட்டிருக்காங்க என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement