சன் பிக்சர்ஸ் என்ன தமிழ் நாடு போலீஸா .! ஆண் மகனாக இருங்கள்.! சன் பிக்சர்ஸ்ஸை வெளுத்த பிரசாந்த்.!

0
1652
- Advertisement -

பேட்ட படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவகாரம் தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பெரும் விவாதமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி வெளியான பேட்ட திரைபடம் விஸ்வாசம் படத்தை விட குறைவான வரவேற்பை பெற்று வருகிறது என்ற பேச்சுக்கள் தீயாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

குறிப்பாக தமிழக்த்தில் முதல் நாளில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கு தான் அதிக வசூல் கிடைத்தது என்று தகவல்களும் வெளியாகி இருந்தன. பெரும் பாலான விமர்சகர்கள் கூட விஸ்வாசம் படத்திற்கே நல்ல விமர்சனங்களை கொடுத்தனர்.

இதையும் படியுங்க : அப்போ சர்கார் வசூலும் பொய்யா.! பேட்ட படத்தால் அசிங்கப்பட்டு வரும் சன் பிக்சர்ஸ்.! 

- Advertisement -

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. “இன்னும் எங்களுக்கு 600 திரையரங்கில் இருந்து முழு வசூல் விவரம் வரவில்லை ‘என குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து பல்வேறு ட்ராகர்களும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல விமர்சகரான பிரசாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை குறிப்பிட்டு, விஸ்வாசம் படத்திற்கு kjr நிறுவனம் செய்த உழைப்பை பாராட்டுவது தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் அதனை மீண்டும் மீண்டும் செய்வேன்.

-விளம்பரம்-

இதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை. இப்படி கீழ் தரமாக நடக்காமல் ஆண் மகனாக இருங்கள் என்று கடுமையாக சாடி இருந்தார். ஆனால், அந்த டீவீட்டை சிறுது நேரத்திலேயே டெலீட் செய்து விட்டார். அதே போல ட்விட்டர் வாசி ஒருவர் சன் பிக்சர்ஸ் உன்னை கைது செய்ய போகிறார்கள் என்று பதிவிட்டதற்க்கு, சன் பிக்சர்ஸ் என்ன தமிழ் நாடு போலீசா என்று கிண்டலாக பதிலளித்துள்ளார் பிரசாந்த்.

Advertisement