பேட்ட படம் அர்ஜுனின் இந்த படத்தின் காப்பியா.! பாத்தா நீங்களே ஒத்துப்பீங்க.!

0
2759
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பழைய ரஜினியை பார்த்தது போல ஒரு திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரஜினியின் நண்பரான சசிகுமார் ஒரு சம்பவத்தில் உயிரிழந்து விடுவார். பின்னர் அவரது மகனை காப்பாற்ற அவருக்கே தெரியாமல் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக பணிபுரிந்து வருவார்.இது தான் படத்தின் கதைக்கரு. ஆனால், இதே கதை தான் அர்ஜுனின் ‘கிரி’ படமும்.

இதையும் படியுங்க : பேட்ட படத்தில் இருக்கும் ஓட்டைகள்.! படத்தில் குறை என்ன.!

- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அர்ஜுனின் நண்பராக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் பிரகாஷ் ராஜ் இறந்துவிட அவரது மகனை காப்பற்ற அர்ஜுன் ஒரு பேக்கரியில் சேருவர். இடைவேளையில் தான் அர்ஜுன் யார் என்ற உண்மையை சொல்லுவார்.

இதே கதை தான் பேட்டையும் இந்த படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் ரீமா சென். சசி குமார் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நவாஸுதீன் கதாபாத்திரத்தில் பேப்சி விஜயன் வடிவேலு கதாபாத்திரத்தில் முனிஷ் காந்த் என்று ஒரு மீம் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement