விஸ்வாசம் படத்தால் பேட்டைக்கு வந்த புதிய தலைவலி..!தமிழகத்தில் ஆதிக்கம் காட்டும் விஸ்வாசம்..!

0
964
Pettavsvisvasam
- Advertisement -

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’அடுத்த பொங்கல் பண்டிகை அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்துடன் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வசம் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ajithvsrajni

- Advertisement -

இந்த போஸ்டர் வெளியாகி சமூக வளைத்தளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தது.அவ்வளவு ஏன் ரஜினியின் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் சாதனைகளை கூட அசால்ட்டாக முறியடித்தார் தூக்குதுரை.இதன் மூலம் ரஜினியின் படத்தை விட அஜித்தின் விசுவாசம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என்று உறுதியானது.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் சென்னை சிட்டி, செங்கல்பட்டு தவிர மற்ற இடங்களில் ஏறக்குறைய 70 சதவீதம் திரையரங்கத்தை இப்போதே கைபற்றி விட்டதாம்.

-விளம்பரம்-

பொங்கல் நெருங்க திரையரங்குகள் கிடைக்க சிரமமாகிவிடும் என்பதாலும், ரஜினியின் பேட்ட படம் வெளியாவதாலும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதலே திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து விட்டார்களாம்.இதனால் பேட்ட படத்திற்கு விஸ்வாசம் படம் அளவிற்கு திரையரங்குகள் கிடைக்க சற்று போட்டியான சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

Advertisement