தமிழக அளவில் விஸ்வாசம்னா உலகளவில் பேட்ட தான்.! எவ்வளவு வித்யாசம்னு பாருங்க.!

0
655
petta-vs-viswasam
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் எதிர்க்கப்பட்ட இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

-விளம்பரம்-
Petta

பேட்ட படத்தின் நிறுவனம் 11 நாட்களில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்த நிலையில், ‘விஸ்வாசம்’ தரப்பில் ரூ125 கோடி வசூல் ஆகியுள்ளதாக அறிவித்தது. இதனால், வசூல் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தமிழக அளவில் ‘பேட்ட’ படத்தை காட்டிலும் ‘விஸ்வாசம்’ அதிக வசூல் செய்துள்ளதாக அதிகப்படியான செய்திகள் வெளியாகின.

- Advertisement -

அதேவேளையில், சென்னை, இந்திய அளவில் மற்றும் சர்வதேச அரங்கில் விஸ்வாசத்தை காட்டிலும் ‘பேட்ட’ திரைப்படம் வசூலில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது, ஜனவரி 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரையிலான 11 விடுமுறை நாட்களின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

‘விஸ்வாசம்’ திரைப்படம் தமிழகத்தில் பேட்டையை விட சுமார் 10 கோடி அதிகமாக வசூலித்துள்ளது. அதேபோல், ‘பேட்ட’ திரைப்படம் சர்வதேச அரங்கில் விஸ்வாசத்தை விட இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளது. ‘பேட்ட’ திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ‘விஸ்வாசம்’ ரூ150 கோடி வசூலை நெருங்கி வருகிறது.ஒட்டுமொத்தமாக பேட்ட படம் இதுவரை 185.10 கோடியும் விஸ்வாசம் 139 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement