சமந்தாக்கு எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது – சமந்தாவை போல அறிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கோவா பட நடிகை.

0
586
pia
- Advertisement -

நடிகை சமந்தாவை போலவே தசை அலர்ஜி நோயால் நடிகை பியா பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவுலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பியா பஜ்பை. இவர் நடிகை மட்டும் இல்லாமல் விளம்பர மாடலும் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-
Samantha

அதனை தொடர்ந்து இவர் ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டறை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பியா நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் இந்தியில் உருவாகும் லாஸ்ட் என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை பியாவும் சமந்தாவை போல மையோசைடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகை சமந்தா அவர்கள் மையோசைடிஸ் என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது சமந்தா இந்த நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் பேட்டியும் அளித்திருந்தார். இதனால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே சமந்தாவிற்கு குணமாகி வரவேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வந்தார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் மையோசைடிஸ் என்ற நோயால் பியா பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பியா கூறி இருப்பது, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் என்னுடைய காலில் வீக்கம் ஏற்பட்டதை நான் கவனித்தேன். ஆனால், அதை நான் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். மறுநாள் மற்றொரு காலும் வீங்கி இருந்தது. இதனை அடுத்து தசை வலி அதிகமானது.

-விளம்பரம்-

இதனால் என்னால் உட்காரவோ, நிற்கவோ முடியவில்லை. இதனை அடுத்து நான் மருத்துவரிடம் பரிசோதனை செய்தேன். அவர்கள் தசை அலர்ஜி நோய் இருப்பது குறித்து கூறினார்கள். இதனால் நான் பயந்துவிட்டேன். பின் நான் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்தேன். அந்த நாட்கள் எல்லாம் என்னால் மறக்கவே முடியாது. ரொம்ப கஷ்டமாகவும், பயமாகவும் இருந்தது. இதை மருந்துகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

உடல் ஆரோக்கியமோ உண்மையான செல்வம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். சமந்தாவின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பியா கூறி இருந்தார். இப்படி இவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே ப்யாவிற்கும், சமந்தாவிற்கும் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement