பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவரை லட்சாதிபதி ஆக்கிய அமீர் கானின் படத்தின் 5 வினாடி காட்சி.

0
408
PK
- Advertisement -

பாலிவுட் நடிகர் அமீர்கானின் பிகே படத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அமீர்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியாகியிருந்த படம் தான் பிகே. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமீர்கான் உடன் அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங் ராஜ்புத், போமன் இராணி, சஞ்சய் தத் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அமீர்கான் அவர்கள் வேற்றுகிரக மனிதனாக இருக்கிறார்.

- Advertisement -

பிகே படம்:

பின் இவருடைய விண்கலத்தின் ரிமோட் கண்ட்ரோல் திருடு போகிறது. இதை கண்டுபிடிக்க இவர் பூமிக்கு வருகிறார். அதற்குப்பின் இவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தை தான் இயக்குனர் சுவாரசியமாக கொடுத்திருக்கிறார். இந்தப் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் சாதனை படைத்திருந்தது. கிட்டத்தட்ட இந்த படம் சுமார் 800 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

மனோஜ் ராய் குறித்த தகவல்:

இந்நிலையில் இந்த படத்தினால் ஒருவருடைய வாழ்க்கை மாறி போய் இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, இந்த படத்தில் பிச்சைக்காரராக நடித்தவர் மனோஜ் ராய். இந்த படத்தில் இவர் ஒரு ஐந்து வினாடி மட்டும் வருவார். உண்மையிலேயே இவர் பிச்சைக்காரர் தான். நிஜ வாழ்க்கையிலும் இவருக்கு கண் தெரியாது. இதனால் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

பிகே மனோஜ் ராய்:

இதை அறிந்த பட குழுவினர் இவருக்கு இருபது ரூபாய் கொடுத்து ஆடிசனுக்கு வர சொன்னார்கள்.இவருடன் ஆடிஷனில் ஏழு பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். கடைசியில் மனோஜ் ராய் தான் தேர்வானார். பின் பிகே படத்தில் அமீர்கான் உடன் சேர்ந்து நடிக்க வேண்டும். இதற்காக இவருக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமும் கொடுத்தார்கள். இந்த பணத்தை வைத்து மனோஜ் ராய் தன்னுடைய சொந்த கிராமத்திலேயே கடை ஒன்றை வைத்து விட்டார்.

மனோஜின் தற்போதைய நிலை:

அதற்குப்பின் படிப்படியாக உழைத்து முன்னேறி வீடு, வாகனம் என்று மனோஜ் சம்பாதித்தார். அதற்குப்பின் இவர் ஒருவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இப்படி அமீர்கானின் பிகே படத்தில் ஐந்து வினாடி காட்சியில் நடித்து மனோஜின் வாழ்க்கை முற்றிலுமாக மாறி இருக்கிறது. தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement