சூர்யா நடமாட முடியாது, அவனை தாக்குவதற்கு தயாராக இருக்கிறோம் – பாமக பிரமுகர் சர்ச்சை அறிவிப்பு. வைரலாகும் வீடியோ.

0
452
surya
- Advertisement -

நடிகர் சூர்யாவை தாக்கம் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த படம் ஜெய் பீம். பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் வெளிச்சம் போட்டு காட்டிய படம் தான் ஜெய் பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

-விளம்பரம்-

இதனால் இந்த படத்தை கண்டித்து ஒரு சில சமூகத்தினர் சோசியல் மீடியாவில் வன்மையாக கண்டித்தும், போராட்டங்கள் நடத்தியும் இருந்தனர். அதிலும் சிலர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வந்திருப்பதாகச் சொல்லி சூர்யா மீதும் இயக்குனர் மீதும் கண்டனம் தெரிவித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்கள் இட்டும் வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மறைந்த நிர்வாகி ஒருவரின் பெயரை வைத்து இருப்பதாக சொல்லி சர்ச்சை எழுந்தது. இதனால் அரசியல் கட்சி நிர்வாகி சித்தமல்லி பழனிச்சாமி தன் கூட்டத்துடன் சேர்ந்து மயிலாடுதுறையில் உள்ள காவல் நிலையத்தில் ஜெய் பீம் பட தயாரிப்பாளர், இயக்குனர்,சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்கள்.

- Advertisement -

பின் சித்தமல்லி பழனிச்சாமிசெய்தியாளர்களை சந்தித்து பேசியது, எங்களுடைய பகுதியில் சூர்யா வந்தால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை சமர்ப்பணமாக கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த வகையிலே நாங்கள் அவனை தாக்குவதற்கு தயாராக இருக்கிறோம். இனி சூர்யா எங்கும் நடமாடக் கூடாது என்று ஆக்ரோஷமாக பேட்டியளித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து வேல் படம் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. பின் படத்தை நிறுத்த சொல்லி வற்புறுத்தி இருந்தார்கள்.

உடனே ஓடிக்கொண்டிருந்த வேல் படத்தை பாதியிலே நிறுத்தி சூர்யாவின் போஸ்டர்களை கிழித்தும், சூர்யாவிற்கு எதிராக திரையரங்கு முன்பு கோஷமிட்டு இருந்தார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ்டேக் அவரது ரசிகர்களால் ட்ரெண்டிங்க் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement