இரவு பார்ட்டியில் மது பாட்டிலால் தாக்கியதாக நிக்கி கல்ராணி தங்கை மீது போலீசில் புகார்.

0
12352
sanjana-galrani
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னடத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 45 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அதன் பின்னர் கன்னட மொழியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தற்போது “இளைய தளபதி ” என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலை ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

இதுவரை இவர் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். Fastrackகிற்காக ஜான் ஆபிரகாமுடன் இவர் நடித்த விளம்பரம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் மீது இரவு பார்ட்டியின் போது மது பாட்டிலால் தாக்கினார் என்று வந்தனா ஜெயின் என்ற தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை சஞ்சனாவும் தற்போது விளக்கமளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சஞ்சனாவும், வந்தனாவுக்கு இரவு பார்ட்டியில் இருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சஞ்சனா விஸ்கி பாட்டிலை தூக்கி தன்னை தாக்க வந்ததாக வந்தனா, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் சஞ்சனாவை போலீசார் அழைத்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சஞ்சனா விளக்கமளிக்கையில், எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால், நான் வந்தனாவை பாட்டிலால் தாக்கவில்லை.

-விளம்பரம்-
Image result for vandana jain

தேவை இல்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். இதனால் நான் மிகவும் நொந்து போய் உள்ளேன் என்று கூறியுள்ளார் சஞ்சனா. ஏற்கனவே நடிகை சஞ்சனா அளித்த பேட்டி ஒன்றில் 16 வயது இருக்கும் போது “கண்டா கண்டாய்தி” என்ற படத்தில் நடித்த போது படத்தில் ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என்று மட்டும் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், அந்த படத்தில் 50 கும் மேற்பட்ட முத்த காட்சிகளில் என்னை வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement