சற்று முன் : பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்த போலீஸ்.! வனிதாவிடம் விசாரணை.!

0
25237
Vanitha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டினுள் சொர்ணாக்காவாக வருவது நம்ம வனிதா தான். தான் பேசும் போது யாரும் பேச கூடாது. ஆனால், மற்றவர்கள் பேசும் போது நான் குறுக்கே பேசுவேன் இது தான் வனிதாவின் லாஜிக். இதனால் ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் கடும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is vanitha-Second-Husband.jpg

- Advertisement -

இந்த நிலையில் குழந்தை கடத்தல் வழக்கில் வனிதாவிடம் விசாரிக்க பிக் பாஸ் வீட்டினுள் போலீஸ் சென்றுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதையும் பாருங்க : சாக்க்ஷி பின்னாடியே போறான் பொருக்கி நாயி.! கவினை திட்டும் அபிராமி.! டெலீட் செய்யபட்ட வீடியோ.! 

அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த அனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

-விளம்பரம்-
Image result for vanitha vijayakumar son

தற்போது ராஜன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தெலங்கானாவில் வசித்து வந்த ஜெயந்திகாவை வனிதாசென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வனிதா மீது ஆள் கடத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வணிதாவிடம் இந்த வழக்கு குறித்து விசாரிக்க தெலுங்கானா போலீசார் தமிழகம் வந்துள்ளனர். பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டிற்குள் நசரத்பேட்டை போலீசார் உதவியுடன் தெலுங்கானா போலீசார் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, வனிதா கைது செய்யபடவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement