அட, குட்டி குந்தவையாக நடித்தது இந்த பிரபல நடிகரின் மகள் தானா – அவரே போட்ட பதிவு இதோ.

0
1176
Trisha
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது குந்தவையாக நடித்த நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கால கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார் மணிரத்தினம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் 2:

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக சில தினங்களுக்கு முன்பு தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் பார்த்து பிரபலங்கள் ரசிகர்கள் எனும் என பலரும் பாராட்டி வந்தார்கள். அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குந்தவை குறித்த தகவல்:

மேலும் இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் திரிஷா மிரட்டி இருந்தார். முதல் பாகத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பேசப்பட்டு இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் திரிஷா பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நீங்காத இளவரசியாக திரிஷா இடம் பிடித்திருக்கிறார். இந்நிலையில் படத்தில் சிறு வயது குந்தவை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிறு வயது குந்தவை புகைப்படம்:

அதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது குந்தவையின் கதாபாத்திரத்தில் நிலா என்பவர் நடித்திருந்தார். இவர் வேறு யாரும் இல்லை, பிரபல நட்சத்திர தம்பதி கவிதா பாரதி-கன்யா பாரதி ஆகியோரின் மகள் தான் நிலா. இவர்கள் இருவரும் மிக பிரபலமான நடிகர்கள் ஆவார். தற்போது சிறுவயது குந்தவையாக நடித்த நிலாவின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே இவர்களுடைய மகள்தானா! என்று ஆச்சரியத்தில் கமண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்

Advertisement