அமரர் கல்கியின் குடும்பத்தினர்களை கெளரவப்படுத்திய பொன்னியின் செல்வன் படக்குழு.

By Siva · 2/10/2022

அமரர் கல்கியின் குடும்ப உறுப்பினர்களை பொன்னியின் செல்வன் பட குழு கவுரவப்படுத்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் எப்போதும் வித்யாசமான படங்களை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : உங்கள் தியாகத்திற்கு அளவே இல்லையா, இதுக்கு எண்டு கார்டு வேண்டாமா? பாரதி கண்ணம்மா சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் சுந்தர சோழர் பிள்ளைகள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை ஆவார்கள். இவருடைய மகன்களான ஆதித்ய கரிகாலனும், அருள் மொழி வர்மனும் ஒவ்வொரு திசையில் போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் கதை:

சோழ சிம்மாசனத்தின் மீது பலரும் ஆசை கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், பழுவேட்டரையரின் மனைவி நந்தினி அவர்கள் முன்னாள் காதலனும், வீரபாண்டியனின் தலையைக் கொன்ற ஆதித்ய கரிகாலனை கொல்ல பாண்டியர்களுடன் சேர்ந்து சதி செய்கிறாள். பின் சோழ சாம்ராஜ்யத்தை வஞ்சமும், துரோகமும் சூழ்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஆதித்யகரிகாலனையும், அருள்மொழியையும் தஞ்சைக்கு வரவழைத்து சோழ நாடு உள்நாட்டு போர்களால் அழியாமல் தடுக்க அவருடைய தங்கையும், இளவரசியமான குந்தவை திட்டம் போடுகிறார். அப்போதுதான் படத்தின் நாயகன் வந்திய தேவன் செய்தி கொண்டு வருகிறார்.

படத்தின் விமர்சனம்:

வந்தியதேவன் செய்தி கொண்டு வரும் பயணம் வழியாக தான் படமே நகர்ந்து செல்கிறது. வந்திய தேவன் கொண்டு வந்த செய்தி என்ன? உள்நாட்டு சதிகளை ஆதித்ய செய்தி அருள்மொழி வர்மனும், குந்தவையும் எதிர்கொண்டார்களா? என்பது தான் படத்தின் சுவாரசியமே. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு படம் வெளியாகி இரண்டே நாட்களில் 150 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

அமரர் கல்கி குடும்பம்:

இதற்கு அமரர் கல்கி எழுதிய நாவல் தான் காரணம். கல்கியின் கனவை இன்று நம் கண் முன் நிறுத்திய மணிரத்தினத்துக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமரர் கல்கியின் குடும்பத்தினருக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கௌரவப்படுத்தி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பு காட்சியை அமரர் கல்கியின் குடும்பத்தினர்களுக்கு திரையிடப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் முன்னிலையில் கல்கியின் குடும்பத்தினர்களை பொன்னியின் செல்வன் படக்குழு அறிமுகப்படுத்தி அவர்களை கௌரவம்படுத்திருந்தது. தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full