உங்கள் தியாகத்திற்கு அளவே இல்லையா, இதுக்கு எண்டு கார்டு வேண்டாமா? பாரதி கண்ணம்மா சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
376
barathi
- Advertisement -

உங்கள் தியாகத்திற்கு அளவே இல்லையா! என்றெல்லாம் பாரதி கண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி இருப்பதால் சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி ரோலில் நடித்த கண்மணி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள். இப்படி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த சில வாரமாகவே சீரியலில் மருத்துவமனையை தீவிரவாதி கும்பல் ஹைஜாக் செய்தது. தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற போலீஸ் முயற்சி செய்தார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் கதை:

பாரதியை மனித வெடிகுண்டாக மாற்றி வைத்தார்கள். பின் கண்ணம்மா பாரதியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருந்தார். இறுதியில் சீரியலில் தீவிரவாதிகள் இடம் இருந்து மக்களை பாரதியும், கண்ணம்மாவும் காப்பாற்றி விடுகிறார்கள். பாரதியின் மொத்த குடும்பமும் வீட்டிற்கு வருகிறார்கள். பாரதி கண்ணம்மாவினுடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கிறார். கண்ணம்மாவும் பாரதியை குறித்து நினைத்து பார்க்கிறார். எப்படியாவது இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற முயற்சியில் பாரதியின் அம்மா, அப்பா, தம்பியும் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வெண்பா செய்யும் சதி:

இந்நிலையில் சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, சீரியலில் வெண்பா கர்பம் ஆகிறார். இவருடைய கர்ப்பத்திற்கு காரணம் ரோகித் தான் என்பது வெண்பாவிற்கு தெரியும். ஆனால், அந்த உண்மையை மறைத்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டுகிறார். பின் பாரதியிடம் யாரால் கர்ப்பமானேன் என்று தெரியவில்லை. என் வயிற்றில் குழந்தை வளர்கிறது நீ என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டதற்கு பாரதி முதலில் முடியாது என்று மறுத்து விடுகிறார்.

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

பின் வெண்பாவம் விஷம் குடிக்கிறார். இதை அறிந்த பாரதி வெண்பாவை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றி விடுகிறார். இருந்தும் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் மீண்டும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கத்தியை எடுத்து மிரட்டுகிறார் வெண்பா. வேறு வழியில்லாமல் பாரதியும் திருமணத்திற்கு சரி என்று சொல்கிறார். தற்போது இந்த ப்ரோமோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்கள் தியாகத்திற்கு அளவே இல்லையா? தயவு செஞ்சு இதுக்கு ஒரு எண்டு கார்டு போட்டு சீக்கிரம் இந்த சீரியலை முடிச்சி விடுங்க என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement