பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இதில் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த அந்த நாவலை கொடுத்த கல்கிக்கு எந்த அளவிற்கு பங்கு இருக்கிறது இதை படமாக எடுக்க முக்கிய பங்கு இவருக்கும் இருக்கிறது.

அவர் தான் இளங்கோ குமரவேல், இவரை ஒரு நடிகராக சில ஆண்டுகள் மட்டும் தான் பலரும் அறிந்திருப்பீர்கள். ஆனால், இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வருகிறார். இவர் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு நாசர் இயக்கி நடித்த மாயன் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவருக்கு இயக்குனர் ராதா மோகனின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் ராதா மோகன் இயக்கிய பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அபியும் நானும் திரைப்படத்தில் ரவி சாஸ்திரி என்ற பிச்சைக்காரர் ரோலில் தன்னுடைய அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

Advertisement

இதையும் பாருங்க : என் கல்யாணத்தப்போ எனக்கு 40 வயசு, என் கணவருக்கு 50 வயசு – சூலம் சீரியல் நடிகை நிர்மலா.

அதன் பின்னர் தமிழில் இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் லாரன்ஸ் ஆக இவரை நீங்கள் பார்த்திருக்கலாம். பொன்னியின் செல்வன் படத்தில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது. மணிரத்தினத்திற்கு முன்பே பொன்னியின் செல்வனை நடத்தி முடித்திய பெருமை இவருக்கு உண்டு ஆனால் இவர் அதை நாடகமாக நடத்தி முடித்திருக்கிறார்.

Advertisement

5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வனை 3 மணி நேர திரைப்படமாக க்ரிப்பா தந்ததுக்கு இவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். Magic Lantern Theatre என்ற நாடக குழுவை நடத்தி வருகிறார். 1999ஆம் ஆண்டே இவர் பொன்னியின் செல்வன் கதையை நாடமாகமாக எடுத்து முடித்து இருக்கிறார். அதற்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்து இருக்கிறது, அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு பிரம்மாண்ட செட் அமைத்து மீண்டும் ஒரு முறை பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தி முடித்து இருக்கிறார்.

Advertisement

இவர் எழுதிய பொன்னியின் செல்வன் மேடைநாடகம் சென்னையிலும் மதுரையிலும் பட்டையை கிளப்பியது. பொ.செ. திரைக்கதைக்கு இவருடைய நாடகம்தான் அடிப்படை. சென்னையில் நடத்தப்பட்ட நாடகத்தில் ஆதித்த கரிகாலனாக நாசர் நடித்திருப்பார். பசுபதி நாசர் போன்ற புகழ் பெற்ற கூத்துப் பட்டறை நடிகர்களால்‌ நடிக்கப்பட்ட இந்த நாடகம் அப்போதே பெரும் பாராட்டு பெற்றது.

தற்போது பொன்னியின் செல்வன் திரைக்கதையை மணி + ஜெயமோகனுடன் சேர்ந்து வடிவமைத்ததும் இவரே.சொல்லப் போனால் ஏற்கனவே அழகாகப் போடப்பட்ட பாதை மேல் தார் ஊற்றிய வேலைதான் மணியும் ஆசானும் செய்தது.2022ம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை வாங்கும் போது இவரை மேடையில் நீங்கள் பார்க்கலாம். பொன்னியின் செல்வன் படத்தின் போற்றப்படாத நாயகன் என்று இவரை சொன்னால் மிகையாகாது

Advertisement