என் கல்யாணத்தப்போ எனக்கு 40 வயசு, என் கணவருக்கு 50 வயசு – சூலம் சீரியல் நடிகை நிர்மலா.

0
258
nirmala
- Advertisement -

எனக்கு 40, அவருக்கு 50 என நடிப்பு முதல், திருமணம் வரை குறித்து சீரியல் நடிகை நிர்மலா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90 காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிர்மலா. இவர் பெரும்பாலும் சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரை படங்களில் நடித்திருந்தார். அதற்கு பின்பு வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் தன்னுடைய பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பிரபல பத்திரிக்கை பேட்டி ஒன்று எடுத்திருந்தது.

-விளம்பரம்-

அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் முதல் திருமண வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, நடிகர் ஜெய்சங்கர் எங்களுடைய உறவினர்தான். அவர் மூலமாகத்தான் என்னுடைய காண்டாக்ட் கண்டுபிடித்து கே எஸ் ரவிக்குமார் சார், மௌனம் ரவி எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்திருந்தார்கள். என் அம்மா, அப்பாவிடம் என்னை நடிக்க வைக்க சொல்லி கேட்டிருந்தார்கள். பின் அவர்களிடம் எப்படியோ பேசி சம்மதமும் வாங்கினார்கள். ஒரே வாரத்தில் முடிவானது தான் புத்தம் புது பயணம். அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் எனக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது. மேலும், சூட்டிங்கில் கே எஸ் ரவிக்குமார் சார் சொல்வதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்தேன்.

- Advertisement -

நிர்மலா சினிமா பயணம்:

அந்த படத்தை இப்ப பார்க்கும்போது குழந்தை மாதிரி நடித்திருக்கிறேன் என்று எனக்கு தோணும். அந்த படத்தை தொடர்ந்து புதிய முகம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் உள்ள எல்லா பாட்டும் ஹிட்டானது. சொல்லப்போனால் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு தான் முதலில் இசையமைத்திருந்தார். ஆனால், ரோஜா படம் முதலில் ரிலீஸ் ஆனதால் அந்த படம் அவருடைய முதல் படம் ஆகிவிட்டது. அப்படியே தொடர்ந்து கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்தேன். நான் முதலில் படத்தில் நடிக்கும் போது பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். இதனால் அப்பா படிப்பு முக்கியம் என்று சொல்லி விட்டார்.

நிர்மலா சின்னத்திரைப்பயணம்:

பின் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு பட வாய்ப்பு வரவில்லை. படித்து முடித்தவுடன் ஹேர் ஹோஸ்டர்ஸ் வேலைக்கு போனேன். மூணு வருஷம் அங்கேயே வேலை செய்தேன். ரேவதி மேடம் உடைய தங்கை அங்கு என்னுடைய கோ-பைலட்டாக இருந்தார்கள். சினிமா பிரபலங்கள் பலரை சந்தித்திருந்தேன். 3 வருஷத்துக்கு பிறகு ரேவதி மேடம் சீரியல் பண்றாங்க என்று கேள்விப்பட்டேன். ரேவதி மேடம் என்னை பார்த்ததும் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். பிறகு நேரடியாக சூட்டிங் வர சொல்லிவிட்டார். அங்கு போனதுக்கு பிறகுதான் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று தெரிந்தது. அப்படித்தான் நிறங்கள் தொடரில் நடித்தேன்.

-விளம்பரம்-

நிர்மலா திருமணம்:

அதனை தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தேன். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான சூலம் சீரியல் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. பின் வீட்டில் என்னுடைய திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். ஆனால், நான் நிச்சயமாக அரேஞ்ச் மேரேஜ் பண்ண மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். எப்போது எனக்கானவரை தேடி கண்டுபிடிக்கிறேனோ அப்பதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று இருந்தேன். எங்க வீட்டில் சொந்தக்காரர்கள் எல்லோருமே எப்போ கல்யாணம்? எப்போ கல்யாணம்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இருந்தாலும், நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்தேன். இறுதியில் என்னுடைய 38 வயதில் எனக்கானவரை சந்தித்தேன். இரண்டு வருடம் நண்பர்களாக இருந்தோம்.

நிர்மலாவின் தற்போதைய நிலை:

அவர் திருமணமே வேண்டாம் என்று என்னை பார்ப்பதற்கு முன்னாடி வரை சொல்லிட்டு இருந்தார். என்னோட நாற்பதாவது பிறந்த நாள். அன்னைக்கு தான் எங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. கல்யாணம் பண்ணும் போது எனக்கு 40 அவருக்கு 50 வயது. பாசிட்டிவ், நெகட்டிவ் என்று ரெண்டு விதமான விமர்சனங்களையும் எங்கள் கல்யாணத்தில் நாங்கள் சந்தித்தோம். அந்த விமர்சனங்கள் எல்லாம் நான் பெருசாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இப்போ `studio N’ என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறேன். என் கணவர் ஆர்க்கிடெக்ட். அவருடனும் சேர்ந்து வேலை செய்கிறேன். சௌந்தர்யா ரஜினிகாந்த் வீடு நாங்க பண்ணிக் கொடுத்தது தான். இப்போ ஒரு பெரிய ப்ராஜெக்ட் செய்து கொண்டிருக்கிறோம் என்று நிர்மலா பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement