முதல் கணவர் விவாகரத்து. நின்று போன சீரியல் நடிகையின் இரண்டாம் திருமணம். காரணம் இது தான்.

0
7521
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆகவும், 543 பேர் பலியாகியும் உள்ளார்கள். நாளுக்கு நாள் ஒட்டுமொத்த உலகமும் கொரோவினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Pooja Banerjee
முதல் திருமணம்

ஊரடங்கு உத்தரவால் பொது இடங்கள், கடைகள், தியேட்டர், கோவில்கள், போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். மேலும், கொரோனாவால் பல நிகழ்வுகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

பல இடங்களில் பல பிரபலங்களின் திருமணம் நிகழ்வுகள் தடைப்பட்டு உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல ஹிந்தி நடிகையின் திருமணமும் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே சினிமா, சீரியல் பிரபலங்களின் திருமணம் என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் திருமணத்தை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி விடுகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது பிரபல இந்தி நடிகை பூஜா பானர்ஜியின் இரண்டாவது திருமணம் நின்று போய் உள்ளது. தற்போது அதை காரணத்துடன் புகைப்படம் பதிவிட்டு வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா பானர்ஜி. இவர் குனால் வெர்மா என்பவரை திருமணம் செய்யவிருந்தார். இது குறித்து அவர் கூறி இருப்பது, இந்த மாதம் என்னுடைய திருமணம் நடைபெற வேண்டியது.

ஆனால், கொரோனாவால் நிறுத்தி விட்டோம். நாடே கொரோனவால் அவதிப்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருமணம் நடத்துவது கொஞ்சம் கடினமாக விஷயம். மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஆடம்பரமாக திருமணம் நடத்துவது முறை அல்ல. சீக்கிரம் இந்த நிலைமை மாறும் என்று கடவுளை வேண்டுவோம். இந்த பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு எங்களுடைய திருமண தேதியை அறிவிக்கிறோம் என்று கூறி உள்ளார்.

ஹிந்தியில் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை பூஜா பானர்ஜி. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த வீடு தேடா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். பின் இவர் பிரபல டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியான Tujh Sang Preet Lagai Sajna ல் கலந்து கொண்டார்.மேலும், இவர் Comedy Nights Bachao, Jhalak Dikhhla Jaa ஆகிய நிகழ்ச்சிகளிலும் போட்டியாளாராக பங்கேற்றார். நடிகை பூஜா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். தற்போது அவருக்கு குணாலுடன் நடப்பது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement