விவகிரத்தான அஜித் பட நடிகையிடம் கடந்த ஆண்டு காதலை தெரிவித்த ரஜினி பட வில்லன். புகைப்படத்தை தற்போது பகிர்ந்த நடிகை.

0
1557
poojabatra
- Advertisement -

90 கால கட்டங்களில் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூஜா பத்ரா. இவர் 1993 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசந்த் எழுதி, இயக்கி மணிரத்னம் தயாரித்து சூப்பர் ஹிட்டான ஆசை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். பின் இவர் ஒருவன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சில படங்களில் மட்டும் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
முதல் கணவருடன் பூஜா பத்ரா

பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்த உடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். பிறகு நடிகை பூஜா அவர்கள் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் சோனு எஸ். அலுவாலியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் கலிபோர்னியாவில் குடியேறினார். ஒன்பது வருடங்கள் கலிபோர்னியாவிலேயே இருந்தார்.

- Advertisement -

பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டில் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும், நடிகை பூஜா அவர்கள் கடந்த ஆண்டு அதாவது 2019 ஆம் ஆண்டு பாலிவுட் மற்றும் கோலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை பூஜா அவர்கள் தன் கணவர் நவாப் ஷா தன்னிடம் முதன் முதலாக காதலை தெரிவித்த போது எடுத்த புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இவர் பதிவிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் நவாப் ஷா அவர்கள் தமிழில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement