சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு இருந்தார். 2011-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது.
இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வருகிறார்.இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன பூனம் பாண்டே, சமீபத்தில் திருமணத்தை முடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான சாம் என்பவரை நடிகை பூனம் பாண்டே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றதா கூறப்படுகிறது.
சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பூனம் பாண்டே உன்னுடன் ஏழேழு ஜென்மம் வாழ காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது கணவர் மீதே பாலியல் புகாரை அளித்துள்ளார் பூனம் பாண்டே, கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் கோவா போலீசார் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.