சூர்யாவின் உயரத்தை லைவ் ஷோவில் கிண்டலடித்த பிரபல தொகுப்பாளினி ! ரசிகர்கள் பதிலடி

0
2830
surya
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தமிழ் ரசிகர்களை தாண்டி ஆந்திரா மற்றும் கேரளாவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் கூட ஆந்திர சென்ற சூரியாவை பார்க்க அதிக கூட்டம் கூடியதால் அவர் வேறு வழியின்று கேட் ஏறி குதித்து வரவேண்டியதாயிற்று.

thana serntha kootam

அப்படி தமிழகத்தையும் தாண்டி ஒரு ரசிகர் வட்டம் வைத்திருக்கும் நடிகரை அவரது உடலமைப்பு வைத்து கிண்டல் செய்யும் மனோபாவம் எவ்வளவு கேவலமானது? அதனை தான் செய்திருக்கின்றனர் பிரபல தொகுப்பாளினிகள் நிவேதா மற்றும் சங்கீதா ஆகியோர். சூர்யாவின் அடுத்த படத்தினை கே.வி ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் அமிதாப்பச்சன் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதனால் சூர்யா அவருடன் நடித்தால் ஸ்டூல் போட்டு அதன் மீது ஏறி நின்றுதான் நடிக்க வேண்டும் என லைவ் ஷோவில் கிண்டல் செய்துள்ளனர்.

- Advertisement -

sangeetha

Niveditha-Sangeetha

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் இவர்கள் செய்த இந்த மோசமான செயலுக்கு அவரது ரசிகர்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூரியா கூறும் நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கின்றோம் என்பது தான் முக்கியம்’ இந்த வசனத்தை வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் சூரியா ரசிகர்கள்.

Advertisement