கிஸ் பண்ண போறியா, இல்ல ஸ்ட்ரைட்டா – டபுள் மீனிங் வசனத்தோடு படு கிளாமர் உடையில் அனேகன் பட நடிகை.

0
10605
amyra
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக பிரபுதேவா திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் மிகச் சிறந்த நடன இயக்குனர் என்பது பலரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் தற்போது பிரபுதேவா அவர்கள் முதல்முறையாக சைக்கோ கில்லர் வேடத்தில் பகீரா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பகீரா படத்தின் ட்ரைலர் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பகீரா படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவா, அமைரா தஸ்தூர், காயத்ரி, ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். 2015 இல் வெளியான Veteran தென்கொரிய திரைப்படத்தைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளனர். ஆர்.வி.பரதன் படத்தை தயாரித்துள்ளார். கணேஷன் சேகர் என்பவர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ், ரம்யா நம்பீஸன் இதில் பாடல் பாடியுள்ளனர்.

- Advertisement -

மேலும், ஆண்களை ஏமாற்றும் பெண்களை பழிவாங்கும் கதையை பல பார்த்திருப்போம். ஆனால், விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் உடன் பெண்களை பழிவாங்கும் திரைப்படமாக பகீரா உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படம் தியேட்டரில் வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பல முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் முரட்டுத்தனமான இதுவரை திரையுலகில் பார்த்திராத கதாபாத்திரத்தில் பிரபுதேவா தோன்றி இருக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. அதில்,ஒரு காட்சியில் அனேகன் பட நடிகை அமைரா படு கவர்ச்சியான ஒரு காட்சியில் நடித்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஷாக்காகி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement