திருச்சியில் இருக்கும் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நடிகர் பிரபு வைத்திருக்கும் வேண்டுகோள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் திருச்சி தூய வளனார் பள்ளி மைதானத்தில் கண்காட்சியை துவங்கி இருக்கிறார்கள். எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க நிர்வாகிகள் என பலர் பங்கேற்று இருக்கின்றனர். மேலும், இந்த கண்காட்சியை நடிகர் பிரபு துவங்கி வைத்திருக்கிறார்.

Advertisement

பின் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரபு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவர் மிகவும் கடினமான உழைப்பாளி. இன்று அவர் முதல்வராக பொறுப்பேற்று இருப்பதற்கு அவருடைய கடின உழைப்பு விடாமுயற்சி தான் காரணம். திமுகவின் உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, மேயராக, துணை முதலமைச்சர், முதலமைச்சராக தற்போது இருக்கிறார். இதற்கெல்லாம் அவருடைய உழைப்பு தான் காரணம்.

அவர் மக்களுக்கு எவ்வளவு இறங்கி வேலை செய்கிறார் என்பதை இந்த புகைப்படம் கண்காட்சி மூலமே நாம் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊர். கருணாநிதி, சிவாஜி, அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்டோர் சிறுவயதில் திருச்சியில் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒரு மாட்டு வண்டிக்காரர் திருச்சியில் இருந்தார். அவரின் மாட்டு வண்டியில் தான் நாங்கள் திருச்சியை சுற்றி வந்திருக்கிறோம். திருச்சி பாலக்கரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் சிவாஜி கணேசனின் சிலையை திமுக அரசு திறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Advertisement

அதோடு நான் இதை வேண்டுகோளாவாகவும் முன் வைக்கிறேன். அது மட்டும் இல்லாமல் திமுகவில் இருப்பவர்கள் கருணாநிதியின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களோ அதே அளவுக்கு சிவாஜி கணேசனின் மீதும் அதிக பாசம் வைத்திருக்கிறார்கள். விரைவில் திருச்சியில் இருக்கும் சிவாஜியின் திருவுருவ சிலை திறக்கப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது.

Advertisement

இவருடைய ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் இவர் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் சிவாஜி என்று கூறினால் அது மிகையாகாது. இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும்.

Advertisement