பிரபுசாலமன்-அஸ்வின் கூட்டணியின் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் – அஸ்வினை விட கவனத்தை ஈர்த்த கோவை சரளாவின் வித்யாசமான லுக்.

0
407
- Advertisement -

பிரபு சாலமன் -அஸ்வின் கூட்டணியில் உருவாகி வரும் படம் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் அஸ்வின் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார்.

- Advertisement -

என்ன சொல்ல போகிறாய் படம்:

பின் இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், பல சர்ச்சைகளுக்கு பின் இந்த படம் வெளியாகி இருந்தது.

அஸ்வின் நடித்த படம்:

ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் அஸ்வினின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் 90களின் இறுதியில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தவர் பிரபுசாலமன். மைனா திரைப்படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அதிகமாக கவனிக்கப்பட்டார். அதன் பின்னர் இவர் இயக்கிய கும்கி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

-விளம்பரம்-

பிரபு சாலமன் பற்றிய தகவல்:

இதை அடுத்து இவர் இயக்கிய கயல், காடான் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் செம்பி. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிக்கிறார். இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கோவைசரளா நடிக்கிறார். அதுவும் 90 வயது பாட்டியாக கோவைசரளா, தம்பி ராமையா பஸ் கண்டக்டர் ஆகவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது.

செம்பி படம் குறித்த தகவல்:

பிரபு சாலமனின் முந்தைய படங்களைப் போலவே இயற்கை அழகு சார்ந்த கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தலைப்பும் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு செம்பி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோவை சரளாவின் வயதான பாத்திரத்தோடு முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது. அஸ்வின் உடன் ஒரு சிறுமியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த போஸ்டர் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் படம் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement