அவ முஸ்லீம், பெரிய டான்ஸாரா வர வேண்டிய பொண்ணு, தந்தைக்கு தெரியாமல் தான் திருமணம் செய்தார் – பிரபுதேவா முன்னாள் மனைவி இந்த டான்ஸர் தானாம்.

0
859
prabudeva
- Advertisement -

பிரபுதேவாவின் முன்னாள் மனைவியும் ஒரு டான்சர் தான் என்ற தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபு தேவா இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பலரும் இவரை அழைக்கப்படுகிறார்கள். சில ஆண்டுகளாகவே பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. சமீபத்தில் தான் பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் அதிகமாக குழந்தைகளை கவர்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரபு தேவா அவர்கள் பகிரா, வினோதன் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

பிரபுதேவா குடும்ப வாழ்க்கை:

இதனிடையே பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா , ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாராவின் மீது காதல் மலர்ந்தது. இது பலருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் நயன்- பிரபு தேவா காதல் திருமணம் வரை சென்று நின்று விட்டது.

பிரபு தேவாவின் இரண்டாவது திருமணம்:

பின் பிரபு தேவா தனியாக தான் வாழ்ந்து வருகிறார். ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவனை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் சமீப காலமாக பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பிரபு தேவா எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் பிரபுதேவாவிற்கு பீகார் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கும் தகவலை பேட்டி ஒன்றில் ஜெயந்தி கண்ணப்பன் கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

-விளம்பரம்-

ஜெயந்தி கண்ணப்பன் அளித்த பேட்டி:

பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருபவர் தான் ஜெயந்தி கண்ணப்பன். இவர் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் பிரபு தேவா திருமணம் குறித்து கூறியிருந்தது, ராம்லதா என்னும் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறேன் என்று இரவு நேரத்தில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பிரபுதேவா என்னிடம் தான் வந்து நின்றார். குஷ்பூ நடனம் ஆடிய ஒத்த ரூபா தாரேன் பாட்டில் ராம்லதா முதல் வரிசையில் நின்று நடனம் ஆடினார். ராம்லதாவும் சிறப்பான நடன கலைஞர். பிறகு பிரபுதேவா நயன்தாராவை காதலித்தது அனைவருக்கும் தெரிந்தது.

பிரபு தேவா திருமணம் குறித்து சொன்னது:

திருமணம் வரை சென்றது. கடைசியில் அவர்களுடைய திருமணத்திற்கு ராம்லதா தடையாக நின்று பிரச்சனை செய்திருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபு தேவா அவர்கள் பீகாரை சேர்ந்த டாக்டர் ஹுமானி சிங் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. பின் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் தகவல் வெளியாகி இருந்தது. அது முழுக்க முழுக்க உண்மைதான் என்று ஜெயந்தி கண்ணப்பன் உறுதியாகக் கூறுகிறார். ஏற்கனவே பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மை தான் என்று அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார்.

Advertisement