தமிழ் சினிமாவில் வெளிவந்த லவ் டுடே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் டிராகன். இந்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து 96 சதவீதம் மதிப்பெண் எடுத்து மெரீட்டில் கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், இவர் பள்ளியில் நன்றாக படித்தும், நல்ல பையனாக இருந்துமே ஒரு பெண் இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் கல்லூரியில் இவர் அடாவடி செய்யும் ரகளை பையனாக வலம் வருகிறார். 48 அரியர் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி அனுபமாவை காதலிக்கிறார்.
இன்னொரு பக்கம் கல்லூரி ப்ரொபசர் மிஸ்கினை எதிர்த்து இவர் நிறைய சேட்டைகள் எல்லாம் செய்கிறார். மேலும், இவருடன் படித்தவர்கள் எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். ஆனால், இவர் மட்டும்தான் பிக் பாஸ் பார்த்து வாழ்க்கை கழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அனுபமா இவருடைய காதலை பிரேக் அப் செய்து விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த பிரதீப், அனுபமா முன்னாடி நன்றாக வாழ வேண்டும் என்று போலி சர்டிபிகேட் தயார் செய்கிறார்.

இதன் மூலம் இவர் மூன்று லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிறார். அப்போது ஒரு நாள் மிஸ்கின், பிரதீப் போலீஸ் சான்றிதழ் மூலம் தான் வேலைக்கு போனார் என்ற விஷயம் தெரியவந்தது. அதைப் பற்றி மிஸ்கின், பிரதீப்பிடம் கேட்கிறார். உடனே அவர், மிஸ்கின் காலில் விழுந்து எல்லாம் கெஞ்சுகிறார். உடனே மிஸ்கின், நீ 48 அரியரையும் இப்போது கிளியர் செய். உன்னுடைய தப்பை மன்னித்து விடுகிறேன் என்று சொல்கிறார்.
அதற்குப்பின் பிரதீப் என்ன செய்தார்? தன்னுடைய அரியரை எல்லாம் கிளியர் செய்தாரா? தன்னுடைய காதலில் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதையே. பிரதீப் இயக்குனரை விட ஹீரோவாக இந்த படத்தில் கலக்கி இருக்கிறார். காமெடி, டயலாக், காதலிப்பது பிரேக்கப், எமோஷனல் காட்சிகள் என அனைத்திலுமே பிரதீப் ஸ்கோர் செய்திருக்கிறார். சொல்லப்போனால், இன்னொரு தனுஷை பார்க்க முடிகிறது. அதே சமயம் ரசிகர்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
இவரை அடுத்து வரும் அனுபமா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவும் அழகாகவும் செய்திருக்கிறார். இயக்குனர் இந்த காலத்திற்கு ஏற்ப ஒரு ட்ரெண்டிங்கான கதையை கொடுத்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் வரும் விஜே சித்து, ஹர்ஷத் கான், பேன் ரவி, ஜோ மைக்கேல் என பலருமே தங்களுடைய வேலையை அருமையாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக மிஸ்கின் உடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இவருடைய கதாபாத்திரம் டான் எஸ்.ஜே சூர்யாவை நினைவுக்கு தான் கொண்டு வந்தது.

இருந்தாலுமே தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பாக மிஸ்கின் உழைத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் படம் பொறுமையாக போரடிக்கும் வகையில் இருந்தாலும் இரண்டாம் பாதியில் அருமையாக இருக்கிறது. பிரதீப்பினுடைய அப்பாவாக வரும் மரியம் ஜார்ஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், கெட்ட வார்த்தைகள், கிளாமர் காட்சிகள் எல்லாம் குறைத்து 16 ப்ளஸ் இல்லாமல் அவர்களுடைய வயதுக்கு ஏத்த கதாபாத்திரமாக இருந்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும்.
இந்த தலைமுறைக்கான வசனம், கதையாக இருந்தாலும் சில காட்சிகள் சலிப்படைய வைத்திருக்கிறது. டெக்னிக்கல், இசையெல்லாம் நன்றாக இருந்தாலும் இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக டிராகன் இருக்கிறது.
நிறை:
ரங்கநாதனின் நடிப்பு அருமை
மற்ற நடிகர்கள் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது
எமோஷனல் காட்சிகள் சூப்பர்
டெக்னிக்கல், ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக இருக்கிறது

குறை:
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
கெட்ட வார்த்தைகள், கிளாமர் காட்சிகளை குறைத்து இருக்கலாம்
சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது
மொத்தத்தில் டிராகன் - ஃபயர் குறைவு






