தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கி நடித்து இருந்த ‘லவ் டுடே’ படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘டிராகன்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பிரதீப் அவர்கள் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார்.
#Dude Top Gear from 9-10-25 #DudeDiwali #Trailer pic.twitter.com/4TSuvusImQ
— Pradeep Ranganathan (@pradeeponelife) October 7, 2025
தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டியூட். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் என்பவர் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மமிதா பைஜி, சரத்குமார், ரோகினி, டிராவிட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
டியூட் படம்:
இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய வெளியிட்டு உரிமையை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது. இதற்கு முன்பு ஏஜிஎஸ் நிறுவனத்தின் மூலம் பிரதிப் ரங்கநாதனின் லவ் டுடே, டிராகன் போன்ற படங்களெல்லாம் வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து மீண்டும் இவர்களின் கூட்டணியில் டியூட் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

டியூட் படம் அப்டேட்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஏஜிஎஸ் நிறுவனம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில், தனி ஒருவன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், மதராசபட்டினம், கோட், லவ் டுடே, டிராகன் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனம்:
டிராகன் படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து இயக்கும் படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இது மட்டும் இல்லாமல் இன்னொரு ஒரு புது படத்திடத்திலும் கமிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இடம் உதவி இயக்குனராக இருந்த சுபாஷ் இயக்கும் படத்தையும் ஏஜிஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இப்படி லவ் டுடே படத்திலிருந்து ஏஜிஎஸ் நிறுவனம் இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வருகிறது.






