யுவனை விமர்சித்து லவ் டுடே இயக்குனர் போட்ட பழைய டீவ்ட்- வச்சி செய்யும் நெட்டிசன்கள்

0
426
- Advertisement -

யுவன் சங்கர் ராஜாவை குறித்து பிரதீப் ரங்கநாதன் போட்ட பழைய டீவ்ட்டை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரல் ஆக்கியதும் கடுப்பாகி பிரதீப் ரங்கநாதன் செய்திருக்கும் செயல் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

லவ் டுடே படம்:

காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றி வைத்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

படத்தின் கதை:

அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்கள் கூட இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் யுவனின் இசையும் காரணம் என்று கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

யுவன் குறித்து ப்ரதீப் சொன்னது:

மேலும், இந்த படத்திற்கான பாடல் ரெக்கார்டிங் போது, எனக்கு பழைய யுவன் வேணும் சார் என்று இயக்குனர் பிரதீப் கேட்டிருந்தார். அவர் கேட்டப்படியே இப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா பழைய பார்முக்கு திரும்பி பாடல்களை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நெட்டிசன்கள் பிரதீப் ரங்கநாதன் போட்ட பழைய ட்விட்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட விஜயின் ஜில்லா படத்தை விமர்சித்து பிரதீப் போட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாக இருந்தது.

பிரதீப் போட்ட பழைய டீவ்ட்:

இந்த நிலையில் இவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி போட்ட பழைய டீவ்ட்களை நெட்டிசன்கள் தேடி எடுத்து வைரல் ஆக்கி வருகிறார்கள். அதாவது, 2010 ஆம் ஆண்டு, யுவன் சங்கர் ராஜா வேஸ்ட், பிராடு என்று போட்டிருக்கிறார். அதேபோல் 2012 ஆம் ஆண்டு போட்ட பதிவில் யுவன் மங்காத்தா படம் தீம் மியூசிக்கை காப்பி அடித்திருக்கிறார் என்றும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இப்படி பிரதீப் போட்ட பழைய டீவ்ட்கள் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் வைரலாக்கி வறுத்து எடுத்து வருகின்றனர். இதனால் கடுப்பான பிரதீப் பேஸ்புக்கில் இருந்தே வெளியே சென்று விட்டார்.

Advertisement