தனுஷ் தொடர்பான கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகர் ஆவார். இவர் ‘கோமாளி’ படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா மூலம் தான் ஆகி இருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘லவ் டுடே’.
இந்தப் படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மற்ற இயக்குனர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்துள்ள படம் ‘டிராகன்’. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
ட்ராகன் படம்:
இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து முதல் முதலாக ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூல் சாதனையும் செய்தது என்றே சொல்லலாம். இந்த படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

பிரதீப் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹைதராபாத்தில் சக்சஸ் மீட் நடைபெற்று இருந்தது. அப்போது விழாவில் பேசிய அஸ்வத் மாரிமுத்து, நான் இயக்கிய ஓ மை கடவுளே படத்தை பார்த்து தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சார் பாராட்டி சோசியல் மீடியாவில் பதிவு போட்டிருந்தார். தற்போது அவர் இந்த டிராகன் படத்தை பார்ப்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் அந்த படத்தை பார்த்தால் நிச்சயம் பெருமையாக இருக்கும் என்று இதை அவரிடம் சொல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=aXq_fKwj_RI
பிரதீப் ரங்கநாதன் அளித்த பதில்:
இவரை அடுத்து விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன் பேசியிருந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், நீங்கள் தனுஷ் மாதிரி இருக்கிறீர்கள் என்று பலருமே சொல்கிறார்கள். அந்த கமெண்ட் உங்களுக்கு பிளஸ்ஸா? அல்லது மைனஸா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு பிரதீப், எனக்கு தெரியவில்லை. நான் கண்ணாடியை பார்க்கும்போது என்னை மட்டும் தான் பார்ப்பேன். என்னுடைய திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
https://www.youtube.com/watch?v=gYvpZprHRLY
அஸ்வத் சொன்ன பதில்:
என்னுடைய இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நல்ல வேலைகளை நான் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே அஸ்வத் மாரிமுத்து, உங்கள் கண்களுக்கு அந்த நடிகரைப் போல இருப்பதாக தெரிகிறது. ஆனால், என்னுடைய கண்களுக்கு பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதன் ஆகவே தான் தெரிகிறார் என்று கூறியிருக்கிறார்.






