ஐநாக்ஸ் திரையரங்கில் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பிரேமலதா விஜயகாந்த் யாத்திசை திரைப்படத்தை கண்டுகளித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவின் பத்து தல படம் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை காண ரசிகர்கள் குவிந்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நரிக்குறவர் பெண் ஒருவர் டிக்கெட் இருந்தும் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளார் என்றும், அந்த பெண்ணை அனுமதிக்க மறுத்ததோடு அவரை ஊழியர் அசிங்கமாக திட்டியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். அது மட்டும் அல்லாத பல்வேறு பிரபலங்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

Advertisement

அதில் ”படம் பார்க்க வந்தவர்கள் அவர்களுடன் சில குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பதால் சட்டத்தின் படி 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதி கிடையாது எங்களுடைய திரையரங்க ஊழியர்கள் இரண்டு வயது, ஆறு வயது எட்டு வயது மற்றும் பத்து வயது சிறுவர்களுக்கு மட்டும் தான் அனுமதியை மறுத்திருந்தார் என்றும் விளக்கமளித்து.

இப்படி ஒரு நிலையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் பேட்டி ஒன்றைஅளித்து இருந்தனர். அதில் எங்களிடம் டிக்கெட் இருந்தும் எங்களை உள்ளே விடவில்லை. அப்போது அருகில் இருந்த சிலர் ஏன் இவர்களை உள்ளே விட மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு அவர்கள் இவர்களை உள்ளே விட்டால் பாக்கு போட்டு கொண்டு எச்சில் துப்புவார்கள் அதனால் தான் உள்ளே விடவில்லை என்று கூறினார்கள்.

Advertisement

பின்னர் அங்கிருந்து அவர்கள் சண்டை போட்டு எங்களை உள்ளே அனுமதிக்க வைத்தார்கள் என்றும் கூறி இருந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் வெறும் சர்ச்சையை கிளப்பியிருந்தது இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு துறை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் ரோகிணி திரையரங்கிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் பழங்குடியின மக்களுடன் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் திரைப்படத்தை கண்டு களித்து இருக்கிறார்.

Advertisement

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் யாத்திசை திரைப்படத்தை 100 பழங்குடியின மக்களுடன் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கண்டு களித்தார். நரிக்குறவர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தேமுதிக சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் யாத்திசை திரைப்படம் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்கள், வாகனம் மூலம் திரையரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன், யாத்திசை படக்குழுவினர் மற்றும் தேமுதிக நிர்வாகிகளும் திரைப்படத்தை பார்த்தனர். படத்தின் இடைவேளையின் போது அனைத்து பழங்குடியின மக்களுக்கும் பாப்கான் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, யாத்திசை திரைப்படத்தை பழங்குடியினத்தவர்களுடன் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

Advertisement