தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் மட்டும் தான். ஆனால், அஜித்துக்கு அந்த பட்டம் வர காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தீனா ‘ படம் தான் காரணம். முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தது நடிகர் மகாநதி ஷங்கர் தான்.அவர் தான் அந்த படத்தில் வரும் முதல் பாடலில் அஜித்தை தல என்று அழைத்திருப்பார்.

மேலும், தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சி பாதிக்காது டா’ என்ற பாடலின் ஆரம்பத்தில் மகாநதி ஷங்கர் தான் ‘தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது ‘ என்று கூறுவார். இந்த படத்திற்கு பின்னர் தான் அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ‘தல ‘ அஜித்தாக மாறினார். இந்த படம் மூலம் தான் முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார்.

Advertisement

தீனா படத்திற்கு முன்பு வரை சாக்லேட் பாயாக இருந்த அஜித்துக்கு ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது தீனா படம் தான். இந்த படத்தில் இடம்பெற்ற பல ஆக்ஷன் காட்சிகள் செம மாஸாக அமைந்து இருந்தது. அதிலும் பிசா ஷாப்பில் லைலாவை ஒரு கும்பல் கேலி செய்ய அஜித் தனது ஆயுதங்களை எடுத்து வெளியில் வைக்கும் காட்சி படு மாஸ்.

இந்த மாஸ் காட்சியில் வந்த அஜித்திடம் அடிவாங்கும் குரூப்பில் இருந்த இவர் வேறு யாரும் இல்லை, மலையாளத்தில் வெளியாகி படு மாஸ் வெற்றியை அடைந்த ‘பிரேமம்’ படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான். அல்போன்ஸ் புத்திரம் ஆரம்பத்தில் தமிழில் பல குறும்படங்களை இயக்கியவர் தான். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement