ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் மலையாளத்தில் தான் வெளிவந்தது. தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள படம் தான் பிரேமம். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள்.பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம்.

இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப், மற்றும் ஜெயம் ரவியின் தீபாவளி படமும் கலந்த கலவையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்து இருந்தாலும். இதில் பெரிதும் பிரபலமானது சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் தான். இந்த படத்தில் சாய் பல்லவிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிடுவது போல காண்பிக்கப்பட்டு இருக்கும்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் இந்த படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் சுவாரசியமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில், ‘பிரேமம்’ படத்தில் ஜார்ஜிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று மலர் கடைசியில் சொல்கிறாள். மூன்று முறை படத்தைப் பார்த்த பின்பும் எனக்கு இது குழப்பமாக இருக்கிறது. அவருக்கு உண்மையில் பழைய விஷயங்கள் மறந்துவிட்டனவா? அல்லது வேண்டுமென்றே ஜார்ஜைப் புறக்கணிக்கிறாரா? அல்லது நினைவுகளை மீண்டும் பெற்று, ஜார்ஜுக்குத் திருமணம் ஆகிறது என்பதால் எதையும் சொல்லாமல் இருக்கிறாரா? உங்கள் பதிலுக்காக என் நண்பனுடன் 100 ரூபாய் பந்தயம் வைத்திருக்கிறேன்” என்று கேள்விகேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன் “அவளுக்கு அனைத்தும் மறந்துவிட்டது. அவளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தபோது அவள் அறிவழகனிடம் பேசியிருக்கலாம். அங்கு செல்லும்போது ஜார்ஜ், செலினோடு மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறாள். ஆனால், அவளுக்கு நினைவு திரும்பியிருப்பது ஜார்ஜுக்குத் தெரியும். இதை வசனங்களில் நாங்கள் சொல்லவில்லை. சைகையிலும், இசையிலும் காட்டியிருப்போம். உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் சொன்னதுபோல அவளுக்குச் சமீபத்தில் நினைவு திரும்பிவிட்டது, ஆனால், ஜார்ஜுக்குத் திருமணம் என்பதால் அவள் அதைச் சொல்லவில்லை என்பதே சரி” என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement