மாளவிகாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு பிரேம்ஜி போட்ட கமன்ட் – ஒரு நடிகைய விடமாட்ராரே.

0
635
Malavika
- Advertisement -

மாளவிகா மோகனின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு பிரேம்ஜி போட்ட கமன்ட்டை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர்.

-விளம்பரம்-
Image

ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா.

- Advertisement -

மயக்கும் மாளவிகா மோகன் :

ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. இறுதியாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதுவும் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

பிரேம்ஜி போட்ட கமன்ட் :

அதிலும் சமீபத்தில் இவர் மாலதீவ்ஸ்ஸுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கே அடிக்கடி நீச்சல் உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் மாளவிகா மோகன் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்து போனார்கள் இப்படி ஒரு நிலையில் மாளவிகா மோகனினின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜியும் கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-59-1024x824.jpg

எல்லா நடிகைக்கும் ஒரே கமன்ட் :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஏதாவது கிண்டலுக்கு உள்ளாகிவிடுகிறார். அந்த வகையில் சமீப காலமாக எந்த நடிகை புகைப்படத்தை பதிவிட்டாலும் அதில் போய் ஜொள்ளு விடும் வகையில் கமன்ட் செய்து வருகிறார். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு செய்த கமன்ட் கேலிக்கு உள்ளாகியளது. சமீபத்தில் நடிகை அமலா பால் படு கவர்ச்சியான உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-185.jpg

இதற்கு நடிகர் பிரேம்ஜி, அசுத்த போன படி ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இவர்களுக்கு மட்டுமல்லாமல் திரிஷா, யாஷிகா, அதுல்யா, பிரியா பவானி சங்கர், அமிரிதா ஐயர், இந்துஜா ரைசா என்று யார் புகைப்படங்களை பதிவிட்டாலும் அதில் தவறாமல் ஒரு விதமான கமெண்டை போட்டு வருகிறார் பிரேம்ஜி. இவரின் இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் பலர் யோவ் கல்யாணத்தை பண்ணி தொலையா… எப்போ பாரு ஹீரோயின்ஸ் picல கமென்ட் பண்ணிட்டு இருக்க என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement