யாஷிகாவின் புகைப்படத்தை கண்டு ஜொள்ளுவிட்டு விடியோவை பதிவிட்ட பிரபல நடிகர்.!

0
10801
Yashika

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் ஒட்டுமொத்த இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தின் மூலம் பெற்ற பிரபலத்தால் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படம் கவர்ச்சியாக தான் இருக்கும். இந்த நிலையில் யாஷிகா பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படம் ஒன்றிற்கு பிரபல நடிகர் பிரேம்ஜி கமன்ட் செய்துள்ளது பெரும் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

இதையும் பாருங்க : நயனின் முன்னாள் காதலர் சிம்பு குறித்து ட்வீட் செய்த நயனின் இந்நாள் காதலர் விக்னேஷ் சிவன்.! 

- Advertisement -

கடந்த சில நாட்களாகவே நடிகர் பிரேம்ஜி யாஷிகாவின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்த நிலையில் யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பிரேம்ஜி ஜொள்ளு விடும் வகையில் ஒரு ரிப்லை ஒன்றை கொடுத்துள்ளார். இதனை கண்ட பலரும் பிரேம்ஜி யாஷிகாவை கண்டு வழிகிறார் என்று கூறி வருகின்றனர். பிரேம்ஜி சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது பலரும் அறிந்த ஒன்று.

View this post on Instagram

😍😍😍 @yashikaaannand

A post shared by Premgi (@premgi) on

]அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மஹத் மூலம் யாஷிகாவிற்கு சிம்புவின் நட்பு கிடைத்தது. சிம்பு யாஷிகாவுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement