திருமண நாள் முடிந்து ஒரு மாசதுக்குள்ள இப்படி ஒரு விசேஷமா. அட்லீ மனைவிக்கு குவியும் வாழ்த்துக்கள்.

By Rajkumar · 7/12/2019

தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் தான் "பிகில்". மேலும்,பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித் தந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் பிகில் படம் ரசிகர்களிடையே வெறித்தனமாகி உள்ளது. இயக்குனர் அட்லீ அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர்.

https://twitter.com/Atlee_dir/status/1202985018479349760

அட்லி இயக்குனர் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். மேலும்,அட்லீ அவர்கள் நண்பன் மட்டும் எந்திரன் ஆகிய படங்களில் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சிறு வயதிலேயே அட்லீ இயக்கத்தில்வெளி வந்த அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்நிலையில் தற்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து இயக்குனர் அட்லீ அவர்கள் பிகில் படத்தை இயக்கியுள்ளார். பிகில் படம் மற்ற இரண்டு படங்களை விட ரசிகர்களிடையே தூள் கிளப்பியது என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு திரையரங்குகளில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படி சினிமா துறைக்குள் நுழைந்த சில காலங்களிலேயே மாபெரும் ரசிகர் கூட்டத்தையும், பாராட்டையும், புகழையும் சம்பாதித்தவர் இயக்குனர் அட்லீ.

இதையும் பாருங்க : பீச்சில் ஆட்டம், காற்றில் பறந்த ஆடை. ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்.

இயக்குனர் கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கி பல சீரியல்கள் நடித்தும், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த பிரியா அவர்களை காதலித்தார். பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். நடிகை பிரியா அவர்கள் எப்போதும் தங்களுடைய இருவரின் ஜோடிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் பிரியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அட்லீ, நாம் நண்பர்களாக சந்தித்தோம் பின்னர் திருமணம் செய்துகொண்டோம் நீ எனக்கு மனைவியாகவும் மகளாகவும் அனைத்தும் ஆகவும் இருந்து வருகிறாய் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய பாப்பா உன்னை இன்றும் என்றும் காதலிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/priyaatlee/status/1203000444970098693

அட்லியின் இந்த உருக்கமான பதிவிற்கு பதில் அளித்த பிரியா ஒவ்வொரு முறையும் எனக்காக நீ சிறப்பான வற்றை செய்கிறாய் அப்பா லவ் யூ என்று காதல் பட தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அட்லீ மற்றும் பிரியாவின் திருமண நாள் சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிரியாவின் பிறந்தநாளுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full