பீச்சில் ஆட்டம், காற்றில் பறந்த ஆடை. ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்.

0
98862
sherin
- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த அக்டோபர் 6 வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

-விளம்பரம்-

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் ஐட்டம் டான்ஸராக களம் இறங்கினார். அந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் தலை காண்பித்து வந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : லீலா பேலஸில் நடந்த நிச்சயதார்த்தம். காரில் கெத்தாக வந்து இறங்கிய விஜய். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அதன் பின்னர் அதனை வேறு எந்த திரைப்படத்திலும் காணமுடியவில்லை அதேபோல நடிகரின் பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமனாக மாறி இருந்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது மீண்டும் உடல் எடை குறைந்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார் சரின் பிக்பாஸ் வீட்டில் சரிவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் இருந்து வந்தது

மேலும், இப் போட்டியின் இறுதி கட்டத்திற்கு 4 பேரை தேர்வு செய்தார்கள். அதில் ஷெரினும் ஓருவர். மேலும் பிக்பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக முகின் ராவ் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சாண்டி இரண்டாம் இடத்தையும், லாஸ்லியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.ஆனால், செரினுக்கு குறைவான அளவில் வாக்குகள் பதிவானதால் அவர் கடைசி நிமிடங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின், அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பீச்சில் ஓடி ஆடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது ஆடை பறக்கவே இந்த போஸ் கவர்ச்சி போஸாக மாறி விட்டது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement