‘நீயும் இப்படி இறங்கிட்டயா, என்ன சிம்ரன் இதெல்லாம்’ ரசிகர்களை புலம்பவிட்ட பிரியா பவானி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

0
929
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. மேலும், இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி, வெங்கடேசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்”. மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். பின் சமீபத்தில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் நடிக்கும் படங்கள்:

இந்த திரைப்படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து உள்ளார்கள். வெங்கடேஷ் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது ப்ரியா பவானி சங்கர் அவர்கள் குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன், மற்றும் இந்தியன் 2, யானை போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் இறங்கிய பிரியா பவானி சங்கர்:

இந்நிலையில் பிரியா பாவனி சங்கரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் நடிகைகள் திடீரென கவர்ச்சிக்கு வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. அந்த வரிசையில் பிரியா பவானி சங்கர் குதித்து இருக்கிறார். இவர் இது வரை நடித்த படங்களில் அனைத்துமே கவர்ச்சி இன்றி நடிப்புக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பிரியா பவானி சங்கர் கவர்ச்சி புகைப்படம்:

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் திடீரென பிரியா பவானி சங்கர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் பிரியா பவானி சங்கர் அவர்கள் பிங்க் நிற சர்ட்டையில் செம கியூட்டாக இருக்கிறார். தற்போது பிரியா பவானி சங்கர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரியாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் போட்ட கமெண்ட்:

அதுமட்டும் இல்லாமல் புகைப்படம் வெளியான மூன்று மணி நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்க்குகளை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள். அதோடு இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நீயும் இப்படி இறங்கிட்டயா, என்ன சிம்ரன் இதெல்லாம்’ என்று புலம்பி தள்ளி வருகின்றனர்.

Advertisement